நாளை பெத்தம்மா திரைப்படம் மற்றும் சவால் பாடல் வெளியீடு - Sri Lanka Muslim

நாளை பெத்தம்மா திரைப்படம் மற்றும் சவால் பாடல் வெளியீடு

Contributors

-அஸ்ரப் ஏ சமத்-
பெத்தம்மா திரைப்படம் சவால் பாடல் வெளியீடு ஞாயிற்றுக்கிழமை
கிழக்கு மாகாணத்தில் ஆழிப்பேரவையினால் பாதிக்கப்பட்ட மக்களின் உளவியல் மாற்றங்களை வெளிக்கொணரும் வகையில் எஸ். ஜனூஸ் எழுதி, இயக்கிய பெத்தம்மா ஆவணத் திரைப்படம் நாளை ஞாயிற்றுக்கிழமை 02ஆம் திகதி கொழும்பு தபால் தலைமையகக் கேட்போர் கூடத்தில் பிற்பகல் 04 மணிக்குநடைபெறும்.

 

 
துருவம் ஊடகவலையமைப்பினால் நடாத்தப்படும் இந்த வெளியீட்டு விழா உலகத் தமிழ் அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத் தலைமையில் நடைபெறும்.

 

 
இந் நிகழ்வில் முன்னிலைஅதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லீம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் கலந்துகொள்வார். பிரதம அதிதியாக முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா,
கல்முனைமாநகர சபை பிரதிமேயர் சிராஸ் மீராசாஹிபு,மத்திய மாகாணசபை உறுப்பினர் அசாத் சாலி,மேல்மாகாண சபை முன்னாள் உறுப்பினர் முஜிபுரஹ்மான்,மனோகனேசன்,ஆகியோறும் கலந்துகொள்வார்.

 

 
அத்துடன் சவால் படத்தின் ஓடியோ வெளியீடும் நாளை நடைபெறும். இந் நிகழ்வில் பெத்தம்மாநடிகர் எம்.ஏ.சி சர்மில் நிகழ்த்துவார். அத்துடன் சவால் படம் பற்றிய அறிமுகவுரையை அதன் இயக்குநரும் துருவம் ஊடகவலையமைப்பின் தலைவருமான பிறவ்ஸ் நிகழ்த்துவார்.

 

 

 

பெத்தம்மா திரைப்படத்தின் முதற்பிரதியை ஒலிபரப்பாளர் இர்சாத் ஏ காதர் சவால் பாடலின் முதற்பிரதியை றோயல் பெயின்ட் நிறுவனத்தின் ஆலோசகர் ஷான் முகம்மத் பெற்றுக் கொள்வார்.

 

Web Design by Srilanka Muslims Web Team