நாவிதன்வெளி: விளையாட்டு உபகரணம் வழங்கும் நிகழ்வு » Sri Lanka Muslim

நாவிதன்வெளி: விளையாட்டு உபகரணம் வழங்கும் நிகழ்வு

b66

Contributors
author image

எம்.எம்.ஜபீர்

நாவிதன்வெளி பிரதேசத்தில் விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணம் வழங்கும் நிகழ்வு ஸ்ரீ முஸ்லிம் காங்கிரஸின் நாவிதன்வெளி பிரதேச அமைப்பாளர் ஏ.சீ.எம்.நிஸார் ஹாஜி தலைமையில் இன்று சனிக்கிழமை அமீர் அலி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கிவைத்தார்.

இந்நிகழ்வுக்கு அதிதிகளாக நாவிதன்வெளி பிரதேச செயலக கணக்காளர் வை. ஹபீப்புல்லாஹ், சவளக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்.எம்.நஜீப், ஸ்ரீங்கா முஸ்லிம் காங்கிரஸின் சவளக்கடை மத்திய குழுத் தலைவர் எம்.ஐ.அஸீஸ், ஓய்வு பெற்ற மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தரும் பிரதி அமைச்சரின் ஆலோசகருமான.ஏ.நபார், பிரதி அமைச்சரின் இணைப்பு செயலாளர்களான நௌபர் ஏ பாவா, ஏ.எம்.ரினோஸ், பிரதி அமைச்சரின் ஊடாக செயலாளர் றியாத் ஏ.மஜீட், ஸ்ரீங்கா முஸ்லிம் காங்கிரஸின் சவளக்கடை மத்திய குழு செயலாளர் ஏ.எல்.ஜலீல், அமானா சமுகசேவைகள் அமைப்பின் தலைவர் எம்.வீ.நபாஸ், விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள், கட்சியின் போரளிகள், பொது மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது ஸ்ரீமுஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷரபின் நினைவாக சிநேகபூர்வ உதைப்பந்தாட்ட மற்றும் கிரிக்கெட் சுற்றுப் போட்டிகளும் இடம்பெற்றது.

b b-jpg2

Web Design by The Design Lanka