நிதானமிழக்கும் SLTJ » Sri Lanka Muslim

நிதானமிழக்கும் SLTJ

sltj

Contributors
author image

ஜாபீர் றாசி முஹம்மத்

SLTJ யினர் ஆர்ப்பாட்டம் செய்யப்போகிறார்கள் என்ற போதே மனதிற்குள் கொஞ்சம் திக் என்றுதான் இருந்தது.அதே நேரம் ஒரு மகிழ்ச்சியும் இருந்தது.

பலரும் மௌனமாக இருக்கும் நேரத்தில் அந்த சகோதர்களுக்குள் இருக்கும் போராட்ட உணர்வு மனதுக்கு ஆறுதலளிக்கிறது.

ஆனாலும் அந்த சகோதரர்களிடம் இருக்கும் அவசரப் புத்தியும் நிதானமின்மையும் அவர்கள் எடுக்கும் முயற்சிகளால் பல பாரிய மோசமான விளைவுகளையும் ஏற்படுத்துவதுண்டு.

இவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தால் எது நடந்துவிடும் என்று பயந்தோமோ அது நடந்திருக்கிறது.

சண்முகா சர்ச்சையில் எமது போராட்டம் என்ன?அதிலே முதலில் தெளிவிருக்க வேண்டும்.

எமது போராட்டம் சேலைக்கெதிரானதா அல்லது முஸ்லிம்களின் கலாச்சார ஆடையை அணிந்து கொண்டு பாடசாலைக்கு வரமுடியாது என்ற கோட்பாட்டிற்கு எதிரானதா?

எமது போராட்டம் பாடசாலை ஆசிரியர்களுக்கு சேலை சிறந்ததா இல்லையா என்பதா அல்லது ஹபாயாவை அணியக்கூடாது என்ற கருத்தியலுக்கு எதிரானதா?

சேலை ஆபசமானதல்ல.ஹபாயாவும் ஆபாசமானதல்ல.சேலை கட்டும் விதம்தான் ஆபாசமானது.அதே நேரம் ஹபாய் அணியும் விதமும் படு ஆபாசமானது.

ஒரு முஸ்லிம் பெண் படு இறுக்கமாக ஹபாயா அணிந்து கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்தைப் போட்டு உலகில் மிக ஆபாசமான ஆடை ஹபாய்தான் என்று கூறினால் உங்களால் வாய் பொத்தி இருப்பதைத் தவிர வேறு வழியிருக்காது.

நீண்ட மேல்சட்டையும் சேலையும் அணிந்து இடுப்பையும் மறைத்து தலையையும் மறைத்து வரும் முஸ்லிம் சகோதரிக்கு ஒரு முஸ்லிம் இயக்கம் என்று மார்தட்டிக் கொள்ளும் நீங்கள் ஏந்தியிருக்கும் இந்தப் பதாகை மன வருத்தத்தைத் தரும்.

சேலைக்கு எதிரானதுதான் உங்கள் போராட்டம் என்றால் அது ஆரம்பிக்கப்படவேண்டியது ஹிந்துக்களிடமிருந்து அல்ல. முஸ்லிம்களிடமிருந்து. ஏனெனில் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் சேலை அணிகிறார்கள்.

போராட்டத்தின் முழுக் கருப்பொருளையே திசைதிருப்பும் பக்குவமில்லாத செயல் இது.

எமது எதிர்ப்பு சேலைக்கோ தமிழர்களின் பண்பாட்டிற்கோ எதிரானது அல்ல.அதை இந்த வழியில் திசை திருப்ப முனைவது ஆபத்தானது.

சேலை அணிவது அவர்களது உரிமை போன்று ஹபாய் அணிவது எமது உரிமை.அதைத் தடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை.அதைத் தடுக்க நினைப்பவர்களின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.இதுதான் எமது போராட்டம்.

அடுத்த முறை இவ்வாறான ஆர்ப்பாட்டங்களில் இறங்கும் போது சற்று நிதானமாகச் சிந்தித்து ஒழுங்கு செய்யுங்கள்

sltj

Web Design by The Design Lanka