நிந்தவூரில் அனைத்து விளையாட்டு கழகங்களின் சம்மேளனம் உதயமாகியது! » Sri Lanka Muslim

நிந்தவூரில் அனைத்து விளையாட்டு கழகங்களின் சம்மேளனம் உதயமாகியது!

n66

Contributors
author image

சுலைமான் றாபி

நிந்தவூரில் உள்ள பதிவு செய்யப்பட அனைத்து விளையாட்டுக் கழகங்களிடையே ஒற்றுமையையையும், பரஸ்பர இணக்கப்பாட்டையும் ஏற்படுத்தும் முகமாக மிக நீண்ட நாள் தேவைகளின் ஒன்றான நிந்தவூர் விளையாட்டுக் கழகங்களில் சம்மேளனம் நேற்றையதினம் (07) மாலை உத்தியோகபூர்வமாக அங்குராப்பணம் செய்யப்பட்டது.

அந்த வகையில் நிந்தவூரில் பதிவு செய்யப்பட்ட கழகங்களான இம்றான், கென்ட், லகான், சதாம், அட்வென்சர், மதீனா, முத்தகீம், சோண்டஸ், அறபா, ஹிக்மா, ரியல் இம்றான், டைட்டன்ஸ், மினா, பிரீடம் ஆகிய 14 கழகங்கள் கலந்து கொண்டன.

இதனைத்தொடர்ந்து கழக சம்மேளன யாப்புக்கள் ஒவ்வொரு கழக தலைவர்களுக்கும் கையளிக்கப்பட்டதோடு அன் பின்னர் நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது.

2017 ம் ஆண்டிற்கான சம்மேளன செயலாளராக முத்தகீன் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஆசிரியர் ஏ.எச். சபீர் முகம்மட் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து 2017 ம் ஆண்டிற்கான தலைவர் தெரிவு இடம்பெற்ற போது இதில் 09 கழக பிரதிநிதிகளின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன.

அதில் அட்வென்சர் கழகம் சார்பாக எம்.எம். மர்சூக், இம்றான் கழகம் சார்பாக சட்டத்தரணி றியாஸ் ஆதம், டைட்டன்ஸ் கழகம் சார்பாக எஸ்.எல்.எம். றாபி, கென்ட் கழகம் சார்பாக எம்.எல். றபீக், றியல் இம்றான் கழகம் சார்பாக சட்டத்தரணி நசீல், லகான் கழகம் சார்பாக எம்.எம். சாஹிர் அஹமட், மதீனா கழகம் சார்பாக ஏ.எம். அன்சார், மினா கழகம் சார்பாக எம்.ஐ.எம். ஜாபிர், சதாம்
கழகம் சார்பாக எம். முபாறக் ஆகியோர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்ட போதும், சம்மேளன யாப்பின் விதிக்கமைவாக மூன்று பேர் மாத்திரமே தெரிவு செய்யப்பட்ட வேண்டும் என்பதற்காக சம்மேளனத்தின் ஒற்றுமையினை கருத்திற்கொண்டு 05 பேர் விலகிக்கொண்டதுடன், அவர்களில் சதாம், லகான், றியல் இம்றான் மற்றும் டைட்டன்ஸ் ஆகிய கழக பிரதிநிதிகள் 04 பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களில் தேர்தல் முறை மூலம் டைட்டன்ஸ், றியல் இம்றான் மற்றும் சதாம் ஆகிய கழக பிரதிநிதிகள் 03 பேர் தெரிவு செய்யப்பட்டனர்.

இதில் நிந்தவூர் டைட்டன்ஸ் விளையாட்டுக் கழகம் சார்பாக எஸ்.எம்.எம். றாபியும் (எம்.சீ.எம்.றிபாய்), றியல் இம்றான் விளையாட்டுக் கழகம் சார்பாக சட்டத்தரணி ஏ.எம். நஸீலும், சதாம் விளையாட்டுக் கழகம் சார்பாக எம். முபாறக் (ஏ.எம். நைறூஸ்) ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து சம்மேளனத்தின் உப செயலாளராக அட்வன்சர் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எம்.எம். மர்சூக் தெரிவு செய்யப்பட்டதோடு, பொருளாளராக இம்றான் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் தெரிவு செய்யப்பட்டார். கணக்காய்வாளராக லகான்விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எம்.எம். சாஹிர் அஹமட் தெரிவு செய்யப்பட்டார்.

மேலும் இந்த சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் பதிவு செய்யப்பட்ட 14 விளையாட்டுக் கழகங்களின் தலைவர்கள் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களாக செயற்படவுள்ளனர்.

இதேவேளை நிந்தவூர் வரலாற்றில் விளையாட்டுக் கழகங்களின் ஒற்றுமைக்காக அனைத்து விளையாட்டுக் கழகங்களின் சம்மேளனம் உருவாக்கப்பட்டமையானது வீரர்கள் மத்தியிலும், கழகங்கள் மத்தியிலும் புதுவித நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

n n-jpg2 n-jpg2-jpg3 n-jpg2-jpg3-jpg6

Web Design by The Design Lanka