நிந்தவூர் அட்வென்ஜர் விளையாட்டுக் கழகத்தின் மென்பந்து கிறிகெற் சுற்றுப் போட்டி. -பிரதியமைச்சர் றியர் அட்மிறல் சரத் வீரசேகர பிரதம அதிதி- Sri Lanka Muslim

நிந்தவூர் அட்வென்ஜர் விளையாட்டுக் கழகத்தின் மென்பந்து கிறிகெற் சுற்றுப் போட்டி. -பிரதியமைச்சர் றியர் அட்மிறல் சரத் வீரசேகர பிரதம அதிதி-

Contributors
author image

P.M.M.A.காதர்

நிந்தவூர் அட்வென்ஜர் விளையாட்டுக் கழகத்தின் 10வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட மென்பந்து கிறிகெற் சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி அண்மையில்(06-09-2014)நிந்தவூர் ஹசன் அலி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

 

விளையாட்டுக் கழகத் தலைவர் எம்.எம்.மர்சூக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொழில், மற்றும் தொழில் உறவுகள் பிரதியமைச்சர் றியர் அட்மிறல் சரத் வீரசேகர விரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

 

மேலும், மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன், பிரதியமைச்சரின் நிந்தவூர் பிரதேச இணைப்பாளர் ஏ.பி.அப்துல் கபூர் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

 

இச்சுற்றுப் போட்டியில் அம்பாரை மாவட்டத்திலுள்ள 32 முன்னணிக் கழகங்கள் பங்கு பற்றியிருந்த போதிலும் இறுதிப் போட்டியிற்கு அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக் கழகமும், சம்மாந்துறை எஸ்.எஸ்.சீ விளையாட்டுக் கழகமும் தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.

 

முதலில் துடுப்பெடுத்தாடிய அட்டாளைச்சேனை சோபர் அணியினர் 5 ஓவர்களில் 4 விக்கற்றுகளை இழந்து 47 ஓட்டங்களைப் பெற்றனர். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சம்மாந்துறை எஸ்.எஸ்.சீ அணியினர் 4.3 ஓவர்களில் ஒரு விக்கற்றினை இழந்து 52 ஓட்டங்களைப் பெற்று ‘அட்வென்ஜர் விளையாட்டுக் கழகத்தின்-2014ம் ஆண்டுக்கான சம்பியன் கிண்ணத்தை வென்றது.
இவர்களுக்கான வெற்றிக் கிண்ணங்களும், பரிசில்களும் பிரதம அதிதி, கௌரவ அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.

 

பிரதியமைச்சர்  சரத் வீரசேகர இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- ‘விளையாட்டு வீரர்கள் எப்போதும் எல்லா விடயங்களிலும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாய்த் திகழ்வது போல் சமூக ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதிலும் முன்னின்று செயற்பட வேண்டும். குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இனவாதம் பேசும் ஒரு சில அரசியல்வாதிகளின் விடயத்தில் விளையாட்டு வீரர்கள் விழிப்பாக இருக்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார்.
மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன் கருத்துத் தெரிவிக்கையில்:-

 

‘தேர்தல் காலங்களோடு தேர்தல் குரோதங்களை மறந்து விடவேண்டும். பின்னர் ஊரின் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு எல்லோரும் ஒற்றுமைப் பட்டு செயற்பட வேண்டும். சிலரின் தனிப்பட்ட குரோதங்களுக்காக ஊரின் அபிவிருத்தியைப் பாழடிக்க முடியாது. அரசியல்வாதிகளிடத்தில் காணப்படும் தேர்தல் காலக் குரோதங்களை இல்லாமல் செய்து, அவர்களை ஒற்றுமைப்படுத்தக் கூடிய வல்லமை விளையாட்டு வீரர்களிடத்தில் காணப்படுகிறது’ எனத் தெரிவித்தார்.
match.jpg2

match

 

match.jpg2.jpg3

 

match.jpg2.jpg3.jpg4

 

match.jpg2.jpg3.jpg4.jpg5

 

match.jpg2.jpg6

Web Design by Srilanka Muslims Web Team