நிந்தவூர் சம்பவம் தொடர்பில் பொலீசாரால் கைது செய்யப்பட்ட 21 பேரில் 6 பேர் விடுதலை! - Sri Lanka Muslim

நிந்தவூர் சம்பவம் தொடர்பில் பொலீசாரால் கைது செய்யப்பட்ட 21 பேரில் 6 பேர் விடுதலை!

Contributors

-எம்.வை.அமீர்

நிந்தவூரில் அண்மையில் இடம்பெற்ற அமைதி இன்மையத் தொடர்ந்து ஏற்பட்ட ஹர்த்தால் மற்றும் நிகழ்வுகளைத்தொடர்ந்து பொலீசாரால் கைது செய்யப்பட்ட 21 பேரில் 6 பேர் விடுதலை செய்யப்பட்டதுடன் ஏனையோர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்டோர்களில் 6 பேர் 18 வயதுக்கு குறைந்த பாடசாலைக்கு செல்வோராகவும், இந்த 21 பேரில் ஒருவர் காரைதீவை சேர்ந்த தமிழர் எனவும் இருவர் அட்டப்பளத்தை சேர்ந்தவர்கள் எனவும் ஒருவர் ஒலுவிலை சேர்ந்தவர் எனவும் தெரிய வந்துள்ளது.

சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட விசாரணைக்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் சட்டத்தரணி முஸ்தபா,சட்டத்தரணி சறுக்காரியப்பர், சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன், சட்டத்தரணி நசீல் உட்பட அதிகமான சட்டத்தரணிகள் ஆஜராகினர்.

இந்த விசாரணையின் போது மாகாண சபை உறுப்பினர் நசீர் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் உட்பட முஸ்லீம் காங்கிரசின் பிரமுகர்களும் சமுகம் அளித்திருந்தனர்.

Web Design by Srilanka Muslims Web Team