நிந்தவூர் பிரச்சினையின் பின்னணியில் முஸ்லிம் காங்கிரஸ் உள்ளது – ஜாதிக ஹெல உறுமய - Sri Lanka Muslim

நிந்தவூர் பிரச்சினையின் பின்னணியில் முஸ்லிம் காங்கிரஸ் உள்ளது – ஜாதிக ஹெல உறுமய

Contributors

கிழக்கு மாகாணத்தில் அதிரடிப்படையினருக்கு எதிரான முஸ்லிம்களின் நடவடிக்கைகளின் பின்னணியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருப்பதாக ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீவர்ணசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

 

 

 

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

அக்கரைப்பற்று நிந்தவூர் பிரதேசத்தில் மக்களுக்கும்அதிரடிப்படையினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலை உருவாக்கியதன் பின்னணியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இருந்துள்ளது.

 

36 மணிநேரம் வீதிகளை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தலைமை தாங்கியவர்கள் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

கல்முனை, அக்கரைப்பற்று, நிந்தவூர், சம்மாந்துறை மட்டுமல்ல. முழு கிழக்கு மாகாணத்திலும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தியுள்ளமைக்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸூம் அதன் தலைமையும் கடந்த காலங்களில் செயற்பட்டு வந்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் வர்த்தகங்களுக்கு எதிராக அதிரடிப்படையினர் தொடர்ந்தும் சட்டத்தை செயற்படுத்தி வருகின்றனர்.

 

இதனை பொறுத்து கொள்ள முடியாத சட்டவிரோத வியாபாரிகளும் பிரதேச அரசியல்வாதிகளும் பின்னணியில் இருந்தே நிந்தவூர் மோதலை ஏற்படுத்தியுள்ளனர்.

கிழக்கு மாகாண சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் இதற்கு தலைமை தாங்கி நடத்தியுள்ளார்.

 

பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை தங்கு தடையின்றி செய்வதில் அதிரடிப்படையினரின் தலையீடு அவர்களுக்கு தலையிடியாகியுள்ளது.

இந்த பிரதேசங்களை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லாத பகுதிகள் போல் வைத்து கொண்டு சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் தேவையே அங்குள்ளவர்களுக்கு இருக்கின்றது என நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க குறிப்பிட்டுள்ளார். meelparvai

Web Design by Srilanka Muslims Web Team