நிந்தவூர் பிரதான வீதியில் கனரக வாகனம் மோதி குடும்பஸ்தர் ஒருவர் பலி. - Sri Lanka Muslim

நிந்தவூர் பிரதான வீதியில் கனரக வாகனம் மோதி குடும்பஸ்தர் ஒருவர் பலி.

Contributors
author image

A.L.A. Rafeek Firthous

நிந்தவூரிலுள்ள கல்முனை – அக்கரைபபற்று அதிவேக பிரதான வீதியில் கனரக வாகனமொன்று, மோட்டார் சைக்கிளில் வந்த குடும்பஸ்தருடன் மோதியதில் குடும்பஸ்தர் ஸ்தலத்திலேயே பலியான சம்பவமொன்று இன்றிரவு(24) நிந்தவூரில் இடம் பெற்றுள்ளது.

நிந்தவூர்-12ம் பிரிவைச்சேர்ந்த ஏ.எல்.சுல்தான் (வயது-65) என்னும் குடும்பஸ்தரே இவ்வாறு பரிதாபகரமாக மறணத்தைத் தழுவியவராவார்.
இதுபற்றி மேலும் தெரியவருவதாவது:-

நிந்தவூரிலுள்ள  லக்சிறி சேவா ஹார்க்கோ லிமிட்டட் நிறுவனத்திற்கு கொழும்பிலிருந்து  பொருட்களை ஏற்றி வந்த கனரக வாகனமே அது திரும்பிச் செல்லும் போது, மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த குடும்பஸ்தர் சுல்தானை மோதியதாகவும், கீழே விழுந்த அவரது உடலின் மேலால் வாகனம் ஏறி இறங்கியதாகவும் நேரில் கண்ட மக்கள் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் இரவு 9.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

(இச்செய்தி அச்சிடும் இந்நேரம் பி.பகல் 12.30 மணி வரை) சடலம் தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, கனரக வாகனமும் சம்மாந்துறைப் பொலிசாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

20180124_230349 27066787_10215694447536909_7798529191239830789_n

Web Design by Srilanka Muslims Web Team