நிந்தவூர் பிரதேசத்தில் இன்று பூரண ஹர்த்தால் ! - Sri Lanka Muslim

நிந்தவூர் பிரதேசத்தில் இன்று பூரண ஹர்த்தால் !

Contributors

சஹீத் அஹமட் : இணைப்பு -2: அம்பாரை -நிந்தவூர் பிரதேசத்தில் இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது. இன்று வர்த்தக நிலையங்கள், தனியார் அரசா பாடசாலைகள்,  காரியாலயங்கள் யாவும் மூடப்பட்டுள்ளன.நேற்று இரவு விசேட அதிரடிப்படையினர் அணியும் படங்கள்

ஆடைகளை ஒத்த ஆடைகளை அணிந்து நிந்தவூர் கடற்கரை

பகுதிக்கு வந்த நான்கு அல்லது ஐந்து பேர் அடங்கிய குழுவினர் கடற்கரையில் வைத்து ஆடைகளை மாற்றிக்கொண்டு நேற்றிரவு ஊருக்குள் வருவதை கண்ட பொதுமக்கள் அவர்களை சுற்றிவளைத்து ஆள் அடையாளத்தை உறுதி படுத்துமாறு கேட்டுள்ளனர்.

ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த தவறிய அவர்கள் தங்களை சுற்றிவளைத்த மக்களை தாக்கிவிட்டு தப்பியோடுவதற்கு முயன்றுள்ளனர். இந்நிலையில், அவ்விடத்திற்கு விரைந்த விசேட அதிரடிப்படையினர் பொதுமக்களால் சுற்றிவளைக்கப்பட்ட அந்த குழுவினரை மீட்டுக்கொண்டு போவதற்கே முயன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கு பொதுமக்கள் இடம்கொடுக்காமையை அடுத்து. விசேட அதிரடிப்படையினர் வானத்தையும் பூமியையும் நோக்கி துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.  நேற்றிரவு இடம்பெற்ற சம்பவத்தை தொடர்ந்தும் இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.

நிந்தவூர் பிரதேசத்தில் கடந்த இரு வாரங்களாக இரவு வேளைகளில் இனந் தெரியாத நபர்கள் வீடுகளுக்கு கற்களை வீசியும், வீட்டின் கூரை ஓடுகளை கழற்றி பொருட்களைத் திருடியும் வந்துள்ளார்கள். பொது மக்கள் இக்கும்பலை பிடிப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளனர் இந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .

 இணைப்பு -2:

ஏற்பட்ட அசம்பாவிதத்தால்  காயமடைந்த நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் எம்,ஏ.எம்.தாஹிர் மற்றும் முஹம்மட் இல்யாஸ் ஆகியோர் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

கல்முனை- அக்கரைப்பற்று நெடுஞ்சாலையில் டயர்களும் மரக்கட்டைகளும் போட்டு எரிக்கப்பட்டுள்ளதால் அவ் வழியாக போக்கு வரத்து சேவைகள் அனைத்தும் தடைப்பட்டுள்ளது. அரசாங்க தனியார் அலுவலகங்கள், வங்கிகள் மூப்பட்டுள்ளன. பாடசாலைகள் இயங்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ்  ஊடகப் பேச்சாளரான அஜித் றோகன  தெரிவித்துள்ள தகவலில் , குறித்த சிறப்பு அதிரடி படை வீரர்கள் ரோந்து நடவடிக்கைக்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் பொது மக்களுக்கும் அவர்களுக்கும் மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கிறார் .

இந்தச் சந்தர்ப்பத்தில் சம்மாந்துறை பொலிசார் அங்கு சென்றிருந்தவேளை, பொது மக்களால் தாக்கப்பட்டு இருவர் காயமடைந்துள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்துள்ளார் .

நிந்தவூர் பிரதேசத்தில் தற்போது உருவாகியுள்ள பதற்ற நிலையை நீக்கி இயல்வு நிலையை ஏற்படுத்துவது தொடர்பாக பிரதேச செயலகத்தில் இன்று மாலை விஷேட கூட்டமொன்று கூட்டப்பட்டுள்ளது.lm

19s6

 

19s4

19s5

 

 

Web Design by Srilanka Muslims Web Team