நிந்தவூர் பிரதேச கலை இலக்கிய விழாவும், நூல் வெளியீட்டு நிகழ்வும். » Sri Lanka Muslim

நிந்தவூர் பிரதேச கலை இலக்கிய விழாவும், நூல் வெளியீட்டு நிகழ்வும்.

20171205_112214

Contributors
author image

A.L.A. Rafeek Firthous

நிந்தவூர் பிரதேச கலை இலக்கிய விழாவும், நூல் வெளியீட்டு நிகழ்வும்.
   -உதவிப் பிரதேச செயலாளர் அஸ்சேஷ் அன்சார் நளீமி பிரதம அதிதி-


கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையில் நிந்தவூர் பிரதேச செயலகமும், கலாச்சார அதிகார சபையும் இணைந்து நடாத்திய ‘நிந்தவூர் பிரதேச கலை இலக்கிய விழாவும், நூல் வெளியீட்டு நிகழ்வும்’ நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் அண்மையில் இடம் பெற்றது.

பிரதேச செயலக கலை இலக்கியக் குழுத் தலைவர் எஸ்.அஹமட் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வுகளில் நிந்தவூர் உதவிப் பிரதேச செயலாளர் அஸ்சேஷ்.ரி.எம்.எம். அன்சார் நளீமி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் இந்நிகழ்வுகளில் கோட்டக் கல்வி அதிகாரி திருமதி. பீ.ஜிஹானா அலீப் நிந்தவூர் கலை இலக்கியப் பேரவைத் தலைவர் டாக்டர்.ஏ.எம்.ஜாபீர், முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.எம்.றசீன், கலாச்சார அதிகார சபை உத்தியோகத்தர் எஸ்.ஏ.எஸ்.எம்.மௌலானா, கலாச்சார உத்தியோகத்தர்களான எஸ்.சுரேஷ் குமார், கே.சுதர்சன், ஜே.எம்.சிஹார் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வுகளில் பாடசாலை மாணவர்களின் கலை, காலாச்சார நிகழ்ச்சிகளும், விவாதப் போட்டிகளும் இடம் பெற்றன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள், பரிசுகள் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நிகழ்வின் இறுதியில் இளம் எழுத்தாளர் எம்.ஏ.எம்.ஜரீத் எழுதிய ‘ஆழிவாசியும், அசாத்திய விஞ்ஞானமும்’ எனும் நூல் வெளியீடு செய்யப்பட்டது.
பிரபல கவிஞரும், எழுத்தாளருமான எம்.ஐ.உசனார் சலீம் நூலின் முதற் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.

உதவிப் பிரதேச செயலாளர் அஸ்சேஷ் அன்சார் நளீமி இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- ‘நமது கலை இலக்கியங்கள் எப்போதும் நமது சமயம் சார்ந்த விடயங்களை உள்ளடக்கியதாக அமைய வேண்டும். அப்போதுதான் எதிர்காலச் சந்ததியினர் பயன்பெறுவர். சமயத்தின் முககியத்துவத்தையும், அது கூறும் நல்வழிகளையும் அறிந்து செயற்படுவர். எனவே கலை இலக்கியங்களை வளர்ப்போர் இதில் அதிக கவனஞ் செலுத்த வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார்.

20171205_102819 20171205_112117 20171205_112214 20171205_121633

Web Design by The Design Lanka