நிந்தவூர் வயலில் சடலமாக ஒருவர் மீட்பு..! - Sri Lanka Muslim

நிந்தவூர் வயலில் சடலமாக ஒருவர் மீட்பு..!

Contributors

நூருள் ஹுதா உமர்.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் பிரதேச செயலாளர் பிரிவில் வயலோரம் இறந்த உடலொன்று காணப்படுகிறது.

நிந்தவூர் பிரதேச சபை கட்டிடத்திற்கு பின்னால் அமைந்துள்ள வயல் காணியில் சடலமாக காணப்படுபவர் இறைச்சி கடை சார்ந்த கூலித்தொழிலில் ஈடுபட்டு வரும் 60 வயதளவில் மதிக்கத்தக்க உபாலி என அறியப்படும் ஜாபீர் என்பவர் என்றும் போதைப்பொருள் பாவனை பழக்கம் உள்ள இவர் கடந்த காலங்களிலும் இவ்வாறு போதைப்பொருள் மூலம் நிதானமிழந்து வீதிகளில் விழுந்து கிடந்ததாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Web Design by Srilanka Muslims Web Team