நிர்மாணத் தொழில் அபிவிருத்தி அதிகார சபையை நிறுவதற்கான சட்ட வரைபு நாளை பாராளுமன்றத்தில் - Sri Lanka Muslim

நிர்மாணத் தொழில் அபிவிருத்தி அதிகார சபையை நிறுவதற்கான சட்ட வரைபு நாளை பாராளுமன்றத்தில்

Contributors
author image

அஷ்ரப் ஏ சமத்

நிர்மாணத் தொழில் அபிவிருத்தி அதிகார சபையை நிறுவதற்கான சட்ட வரைபு  நாளை (23) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக   வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

 

இச் சட்ட முலம் சம்பந்தமாக இன்று(22) ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் விமல் வீரவன்ச மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார்.
வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் கீழ் உள்ள’ இக்டாட் ‘ எனும் நிறுவணம் கடந்த 30 வருட காலமாக இயங்கி வருகின்றது. இதனை அதிகார சபையாக மாற்றுவதற்கு அமைச்சரவையிலும், திரைசேரி மற்றும் அனுமதி பெறப்பட்டு நாளை செவ்வாய்க்கிழமை(23) ஆம் திகதி பாராளுமன்றத்தில் நகல் சட்டம் விவாவதற்குட்படுத்தப்பட்ட பின் அங்கிகராம் கிடைத்தவுடன் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

 

இலங்கையில் நிர்மாணத் தொழிலின் அபிவிருத்திக்கு ஏற்பாடு செய்வதற்கும் நிர்மாணததொழிலின் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கும் பதிவு செய்வதற்கும் விதிமுறைப்படுத்துவதற்கும்  மற்றும் தரப்படுத்துவதற்குமான கருமங்களை செய்வதற்கு இவ் அதிகார சபை ஸ்தாபிக்கப்படுகின்றது.

 

இந்த நாட்டில் நிர்மாணத்துறையில் ஈடுபடும் 2 இலட்சம் பேர் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு பதிவு வழங்குதல், என்.வி.கியு சான்றிதழ் வழங்குதல், இந்த நாட்டில் உள்ள சகல நிர்மாணத் தொழிலாளர்கள், ஒப்பந்தக் காரர்கள், வெளிநாட்டு உள்நாட்டு நிர்மாணக் கம்பணிகள் இந்த அதிகார சபையின் ஊடாக  நிர்மாணப் கருமங்களை ஆற்றல் வேண்டும்.

 

தனியார், மற்றும் அரச திணைக்களங்களில்  கட்டிட நிர்மாணங்களை நிர்மாணிக்கும் கம்பணிகளது நிர்மாணங்கள், கட்டிடங்கள் தரம்,  மற்றும் பதிவுகள் முதலீடல் போன்ற விடயங்களும் ;இந்த அதிகார சபையின் கீழ் கருமாற்ற வேண்டும்.

 

ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவின் ஊடாக சகல கட்டுமாண தொழிலாளர்கள் ஒன்று திரட்டப்படுவர்கள். அவர்களுக்கான பதிவு, காப்புறுதி. தொழில் பாதுகாப்பு ஓய்வுதீயம், பயிற்சி வங்கிக் கடன், ஆகியனவும் இந்த அதிகார சபையினால் செயல்படுத்தப்படும்.  ஒருவர் தனது வீட்டைக் கட்டிக்கொள்வதற்காக மரவேலை, மேசன் மிண்னியலாளர், தரைஓடுபதிப்பவர், போன்றவர்களை தெரிபுசெய்யும்போது இந்த அதிகார சபையின் ஊடக பதியப்பட்டு அவருக்கு அடையாள அட்டை பெற்று பயிற்சி பெற்ற ஒருவரை தேர்ந்தெடுக்க முடியும்,

 

 அத்துடன் தாம் அமைக்கும் நிர்மாணக் கட்டிடங்கள் சக்தி வாய்ந்ததா மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை பெற்றுக் கொள்ள முடியும்.

 

அத்துடன் நிர்மாணம் மீதான தேசிய மதியுரைப் பேரவையைத் தாபித்தல், நிர்மாண தொழில் அபிவிருத்தி நிதியம், தொழிலாளர்களை உயர் தொழிலர்கள் உற்பத்தியாளர்கள், வழங்குநர்கள் ஒப்பந்தக்கார்கள் மற்றும் கைவினைஞர்கள் என்போரினது முன்னேற்றத்துக்காகவும் நல்வாழ்வுக்காகவும்  வழிமுறைகளை ஏற்பாலடுசெய்வதற்கும் நிர்மாணச் செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட பிணக்குகளைத் தீர்த்து வைப்பதற்கும் அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாட செய்வதற்காக இந்த சட்டமுலம் வீடமைப்ப நிர்மாணத்துறை அமைச்சினால் நாளை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட உள்ளது. என அமைச்சர் விமல் தெரிவித்தார்.  

Web Design by Srilanka Muslims Web Team