நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் கார் மோதி ஒருவர் பலி - Sri Lanka Muslim

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் கார் மோதி ஒருவர் பலி

Contributors

திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் கார் ஒன்று மோதியதில் மோட்டார் சைக்கிள் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (30) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த கார் ஐந்தாம் கட்டை பகுதியில் வீதி ஓரத்தில் நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவருகிறது.

இதில் 3 பிள்ளைகளின் தந்தையான திருகோணமலை கப்பல்துறை பகுதியை சேர்ந்த கே. அந்தோணிசாமி (48 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விபத்து தொடர்பில் கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

-திருகோணமலை நிருபர் பாருக்-

Web Design by Srilanka Muslims Web Team