நீதிபதி எம்.பி.முகைதீன் எழுதிய பிணையா விளக்க மறியலா நூல்அறிமுக விழா » Sri Lanka Muslim

நீதிபதி எம்.பி.முகைதீன் எழுதிய பிணையா விளக்க மறியலா நூல்அறிமுக விழா

b

Contributors
author image

P.M.M.A.காதர்

மருதமுனை சட்டத்தரணிகள் அமையத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.பி.முகைதீன் எழுதிய பிணையா விளக்க மறியலா நூல்அறிமுக விழா நாளை மாலை(13-10-2017)3.30 மணிக்கு மருதமுனை கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில் சிரேஷ்ட சட்டத்தரணியும்,முன்னாள் கிழக்கு மாகாண மேல் நீதிமன்ற நீதிபதியுமான எம்.எஸ்.எம்.ஜமீல் தலைமையில் நடைபெறவுள்ளது.

இதில் பிரதம அதிதியாக மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி தாவூத் லெப்பை அப்துல் மனாப் கலந்து கொள்கின்றார்.

கௌரவ அதிதிகளாக வாழைச்சேனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.சி.எம்.றிஸ்வான்,திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம்.ஹம்சா ஆகியோரும்,விஷேட அதிதியாக மட்டக்களப்பு தொழில் நியாய சபைத் தலைவர் வி.எம்.சியான் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

b

Web Design by The Design Lanka