நீதிமன்றத்திற்கு முன்னால் பாடல் இசைத்த ஐஸ்கிறீம் வானுக்கு தண்டம் - Sri Lanka Muslim

நீதிமன்றத்திற்கு முன்னால் பாடல் இசைத்த ஐஸ்கிறீம் வானுக்கு தண்டம்

Contributors

 

(tamil mirror)

யாழ். நீதிமன்றத்திற்கு முன்னால் ஐஸ்கிறீம் வானில் பாடலை ஒலிக்கவிட்டபடி சென்றவருக்கு  யாழ்.நீதவான் நீதிமன்றம் 1500 ரூபா தண்டம் விதித்துள்ளது.

நீதிமன்ற நடவடிக்கைகள் நேற்று (19) நடைபெற்றுக்கொண்டிருந்த போது, மேற்படி ஐஸ்கிறீம் விற்பனை செய்யும் வான் பாடலை ஒலிப்பியபடி சென்று கொண்டிருந்தது.

மேற்படி வானை கைப்பற்றுமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டதிற்கமைய பொலிஸார் வானைக் கைப்பற்றியதுடன் அதன் உரிமையாளரை கைது செய்து நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தினர்.

இதன்போது, குறித்த நபருக்கு 1500 ரூபா தண்டம் விதித்த நீதவான், இனிமேல் இவ்வாறான தவறுகளை செய்ய வேண்டாம் என கடுமையாக எச்சரிக்கை செய்து விடுவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team