நீதி அமைச்சர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு - Sri Lanka Muslim

நீதி அமைச்சர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

Contributors

பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய் மூலமான கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக பாராளுமன்றத்தில் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்போது உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தொல் பொருள் ஆய்வு மூலம் எந்தவொரு மதத்திற்கும் இனத்திற்கும் பாதிப்பு ஏற்படாது என்று கூறினார்.

நாட்டின் வரலாற்றை கண்டறிவதற்கு நாட்டிற்கு உரிமை உண்டு என்று அவர் கூறினார். பாராளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலநாதன் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் பிரமித்த பண்டார தென்னகோன் கேட்ட கேள்வி ஒன்றுக்கு நீதியமைச்சர் அலி சப்ரி பதிலளித்தார். இதன்போது முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்ட செயற்பாட்டினால் ஏற்பட்ட தவறை சரிசெய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நீதியமைச்சர் குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக ,பிரதமருடன் பேச்சு வார்த்தை நடைபெறும் என்றும் அவர் கூறினார். பிரதம நீதியரசரை பதவியில் இருந்து நீக்குவது பாராளுமன்ற விதிமுறைகளுக்கு அமைவாக மேற்கொள்ள வேண்டும். ஜனாதிபதியினால் அதனை மேற்கொள்ள முடியாது. இதற்கமைவாக பிரதம நீதியரசராக செயற்பட்ட மொஹான் பீரிஸை கடந்த கால அரசா ங்கம் நீக்கிய தவறு சரி செய்ய வேண்டிய விடயமாகும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரட்ன ,கொவிட் நிதியம் தொடர்பாக கேட்ட கேள்வி ஒன்றுக்கு நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் பதிலளித்தார்.

இந்த நிதியம் மத்திய வங்கியின் ஆளுநரின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team