நீராடச்சென்ற பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி பலி! - Sri Lanka Muslim

நீராடச்சென்ற பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி பலி!

Contributors

நுவரெலியா – இராகலையில் பகுதியில் நீராடச்சென்ற பாடசாலை மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இராகலை – கொரண்டிக்குளத்தில் இன்று பிற்பகல் நீராடச்சென்ற நிலையில் குறித்த மாணவன் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவனை தேடும் பணிகளை பிரதேச மக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து முன்னெடுத்திருந்தனர்.

இந்த நிலையில், காணாமல் போயிருந்த மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இராகலை சூரியகந்தை பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய மாணவன் ஒருவனே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இராகலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team