நீரிழிவை வெற்றி கொள்ள சில அற்புதமான வழிகள்!!! - Sri Lanka Muslim

நீரிழிவை வெற்றி கொள்ள சில அற்புதமான வழிகள்!!!

Contributors

 

-அபுறைகான்-

நீரிழிவு நோய் சத்தமில்லாமல் மனிதனைக் கொல்லும் நோய்களில் ஒன்றாகும். இந்நோயை கட்டுப்படுத்த போதிய அளவு கவனிப்பையும்இ செயல்பாடுகளையும் செய்வது அவசியமாகும். நீங்கள் நீரிழிவினால் பாதிக்கப்பட்டிருந்தால்இ ‘ஆரோக்கியமான வாழ்விற்கு சுகாதாரமான உணவும்இ சிறிதளவு உடலுழைப்பும் தேவை’ என்ற மந்திரத்தை நினைவில் கொள்ளுங்கள்.

நீரிழிவினால் பாதிக்கப்பட்டிருந்தால் முறையான உணவுப்பழக்கத்தை நீங்கள் கடைபிடிக்க வேண்டியது முக்கியமான விஷயமாகும். நீரிழிவு நோயினால் 6 நொடிகளுக்கு ஒருவர் இறந்து கொண்டிருக்கிறார் என்று ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது!! கடந்த சில ஆண்டுகளாகவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெகு வேகமாக உயர்ந்து வருவதால்இ நீரிழிவை கட்டுப்படுத்தும் தீர்வுகளை கண்டறிய வேண்டியது அவசியமாக உள்ளது. இந்நோயைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டாக உலக நீரிழிவு தினம் பல்வேறு வழிமுறைகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

உடல் மிகவும் குண்டாக இருப்பதும் மற்றும் வாழ்க்கை முறையும் நீரிழிவு நோயில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவேஇ நாம் இந்த பிரச்னைகளை கவனித்து நீரிழிவு நோயைத் தவிர்க்க வேண்டியது அவசியமானதாக உள்ளது. இங்கே நீரிழிவு நோயைத் தவிர்ப்பதற்கான சில அற்புதமான உணவுகள் பற்றி உங்களுக்காக கொடுத்துள்ளோம்.

1

ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள்
‘நாளுக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால்இ மருத்துவரிடம் இருந்து விலகி இருக்கலாம்’ என்பது உண்மையில் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற பழமொழியாகும். கலோரி அளவு குறைவாகவும்இ நிறைய நார்ச்சத்து நிறைந்ததாகவும் இருப்பதால் ஆப்பிள் நீரிழிவு நோயாளிகளுக்கு அமுத உணவாக உள்ளது. இவற்றின் தோலை உரிக்காமல் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

2

மீனே மீனே!!
நீரிழிவை கட்டுப்படுத்துவதற்கு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மிகவும் தேவை. இவற்றை எங்கே கண்டறிவது? சால்மன்இ மத்திஇ மார்கல் போன்ற மீன்களில் இந்த அமிலம் நிறைய உள்ளது. இவை சுவையாக இருப்பதுடன்இ உங்களுடைய மோசமான கொழுப்புகளையும் குறைத்து விடும்.

3

பசுமையே வளமை!
நீரிழிவை சமாளிப்பதில் சிறந்த வழிகளில் ஒன்றாக இருப்பது ‘பசுமைக்கு பச்சைக்கொடி காட்டுவதே’.உங்கள் உணவில் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுங்கள். இவை இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும் முக்கியமான பணிகளை செய்கின்றன. நீரிழிவின் காரணமாக பார்வைக் கோளாறுகள் உருவாகும் வாய்ப்புகள் உள்ளனஇ எனவே வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி உடைய காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வதால் நீரிழிவை தவிர்ப்பதுடன்இ பார்வைக் கோளாறுகளையும் தவிர்க்க முடியும்.

4

ஓட்ஸ் உணவு
ஓட்ஸ் உணவை சாப்பிடுவது நீரிழிவை நீங்கள் வெற்றி கொள்ள உதவும். நார்ச்சத்து மிக்க இந்த உணவின் மூலம்இ இரத்தத்தின் சர்க்கரை அளவை அதிகப்படுத்தும் கார்ப்ஸ்களின் நேர அளவை நீட்டிக்கச் செய்ய முடியும். எனவேஇ இதன் பின்னர்இ உங்கள் காலை உணவுடன் ஓட்ஸ் சேர்த்துக் கொள்ளுங்கள்.

5

ஒரு கப் டீ போதுமே!
நீங்கள் தேநீர் பிரியராக இருந்தால்இ கவலையை விட்டு விடுங்கள்!! உங்கள் தேநீரில் உள்ள டான்னின் மற்றும் கேடசின் ஆகியவை இரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகின்றன. எனவே தேநீர் குடியுங்கள்இ சர்க்கரை நோயை விரட்டுங்கள்.

6

பழ உணவு
நீங்கள் நீரிழிவு நோயை வெல்ல விரும்பினால் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். எனவேஇ வைட்டமின் சி உள்ள பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளவும். இந்த பழங்களில் ஆக்ஸிஜன் எதிர் பொருட்கள் உள்ளதால்இ நோய்த் தொற்றுகளை தவிர்த்திட முடியும்.

7

கேரட் சாப்பிடுங்கள்
கேரட்டில் உள்ள பீட்டா கேரட்டின் இயற்கையின் கொடையான சத்தாகும். இது நீரிழிவை வெற்றி கொள்ள உதவும் சத்தாகும். இது நீரிழிவை குறைக்கவும் மற்றும் இரத்தத்தின் சர்க்கரை அளவை குறைக்கவும் உதவுகிறது. காலையில் நடக்கும் போது ஒரு கேரட்டை சாப்பிடுவது நல்லது.

8

ஆலிவ் எண்ணெய்
ஆலிவ் எண்ணெயில் உள்ள எரிச்சலை போக்கும் தன்மைஇ நீரிழிவை வெற்றி கொள்ள உதவும். ஆலிவ் எண்ணெயில் உள்ள நல்ல கொழுப்பு இன்சுலின் தடுப்பினை அதிகரிக்கிறது. மேலும்இ உங்கள் உணவின் சுவையை கூட்ட ஆலிப் எண்ணெயை சேர்த்துக் கொள்ளவும்.

9

பருப்புகள்
நீரிழிவிற்கு பருப்புகளை சாப்பிடுவது நல்லது. பருப்புகளை சாப்பிடுவது ஆரோக்கியமானது மட்டுமல்லாமல்இ இதய நோய்களைத் தவிர்க்கவும் உதவியாக உள்ளன. பருப்புகளில் புரதச்சத்தும்இ நார்ச்சத்தும் நிறைந்துள்ளன.

10

தாவர ஊட்டச்சத்துக்கள்
பீன்ஸில் உள்ள தாவர ஊட்டச்சத்துகள் நீரிழிவை நீங்கள் வெற்றிகரமாக எதிர்கொள்ள உதவுகிறது. ஊறவைத்த அல்லது வேக வைத்த பீன்ஸில் புரதங்களின் அளவு மிகவும் அதிகமாக உள்ளன. இது மிகவும் சுவையான மற்றும் சுகாதாரமான உணவாகும். எனவே முயற்சி செய்து பாருங்கள்.

-நன்றி (tds)

Web Design by Srilanka Muslims Web Team