நீர்கொழும்பில் பரபரப்பு » Sri Lanka Muslim

நீர்கொழும்பில் பரபரப்பு

shoot

Contributors
author image

Editorial Team

குறித்த சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாகவும், எவ்வித உயிரிழப்புக்களும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

சற்றுமுன் வேனில் வந்த இனந்தெரியாத குழுவினருக்கும் விஷேட அதிரடிப்படையினருக்கும் இடையில் கடும் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்று வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் நீர் கொழும்பு குறன பகுதியில் வைத்து இடம்பெற்று வருவதாகவும், அப்பகுதியில் பதற்றம் நிலவுவதாகவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

விஷேட அதிரடிப்படையினர் பயணித்த வாகனத்தினை இலக்குவைத்து குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, அப்பகுதியில் பாதுகாப்பினை பலப்படுத்த பொலிஸார் மற்றும் அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Web Design by The Design Lanka