நீர்கொழும்பில் மீன்களை உண்ணவோ, மீன் பிடிக்கவோ செல்ல வேண்டாம் - சட்டதரணி தர்ஷனி லாவுதபு..! - Sri Lanka Muslim

நீர்கொழும்பில் மீன்களை உண்ணவோ, மீன் பிடிக்கவோ செல்ல வேண்டாம் – சட்டதரணி தர்ஷனி லாவுதபு..!

Contributors


– Ismathul Rahuman –

எறிந்த கப்பலில் இருந்து இரசாயனப் பதார்தங்கள் கடலில் கலந்துள்ளதனால் கடல் சுற்றாடலின் பாதிப்பு அதிகமாகும். அதனால்தான் அப்பிரதேசத்தில் மீன்பிடி தொழிலுக்கும் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது என கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டதரணி திருமதி தர்ஷனி லாவுதபுர தெரிவித்தார்.

இரசாயன எரிபொருட்கள் கடலிலிருந்து நீர்கொழும்பு களப்பில் சங்கமமாகுவதை தடுக்க கொதலாவல பிலத்தில் போடப்பட்டுள்ள “ஒயில் பூம்” ஐ பார்வையிட இரஜாங்க அமைச்சர் நாலக்க கொடஹேவாவுடன் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட போது

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 

கடலில் ஏற்பட்டுள்ள பாதிப்பு கடுமையானது. கூடிய சீக்கிரம் கடலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை அகற்றவும் கடற்கரையில் தேங்கியுள்ள இரசாயன கழிவுகளை அகற்றி சுத்தம்செய்யும் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

தீடீர்ரென ஏற்பட்ட இந்த அனர்தம் அபாயகரமானது. இரசாயனக் கலவைகள், பிலாஸ்ரிக் மனிகள் கடலோரத்தில் நிரைந்திருப்பதை கண்களால் கண்டோம்.இதனால்தான் கடல் சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடல் உயிரினங்களுக்கும், கடல் தவரங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. அதனை சாதாரண சூல்நிலைக்கு கொண்டுவர முயற்சி எடுத்துள்ளோம்.

பாதிப்பிற்கு உள்ளான இப்பிரதேசத்தில் மீன்பிடித் தொழிலுக்கும் செல்ல வேண்டாம் என தொடர்ந்து கூறிவருகிறோம். இப்பிரதேச மீன்களை உண்ணுவது ஆபத்தானது. இப்பிரதேச மீன்கள் சந்தைக்கு வருவதில்லை. அதனால் அவதாண நிலமை குறைவு.

சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதனால், அதனைமீறி செயல்படுவது குற்றமாகும். இப்பிரதேசத்தில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என கூறியிருப்பதால் அதனை பூரணமாக கடைபிடிப்பது ஒவ்வொர மீனவர்களினதும் பொறுப்பாகும். மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் இருப்பதை அவதானிப்பது இப்பகுதியில் உள்ள சம்பந்தப்பட்ட அணைத்து அதிகாரிகளினதும் பொறுப்பாகும்.

இக்கடல் பிராந்தியத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதனால், மீன்களின் உடல்களிலும் பாதிப்பு ஏற்படும் சந்தர்பம் அதிகம். அதனில்தான் இப்பிதேச மீன்களை உண்ண வேண்டாம் என்கிறோம்.

முதல்கட்டமாக கடலோரப் பிரதேசத்தை துப்பரவு செய்யும் பணியை ஆரம்பித்துள்ளோம். இரண்டாம் கட்டமாக கண்டல் தாவரம் மற்றும் கடல் தாவரங்களை பாதுகாப்பதற்கான செயல்திட்டம் ஆரம்பிக்கப் படும் எனக் கூறினார்.

Web Design by Srilanka Muslims Web Team