நீர்கொழும்பு சம்பவம்: (02ம் இணைப்பு) » Sri Lanka Muslim

நீர்கொழும்பு சம்பவம்: (02ம் இணைப்பு)

IMG_2736

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

MM Media Unit


நீர் கொழும்பில் விசேட அதிரடிப்படையினருக்கும் பாதாள உலக கோஸ்டியினருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்

நீர்கொழும்பு குரணை பிரதேசத்தில் நேற்று மாலை 5.00 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படையினருக்கும் பாதாள உலக கோஸ்டியினருக்கும் இடையில் இந்த துப்பாக்கிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாதாள உலக கோஸ்டியைச் சேர்ந்த இருவரே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

நீர்கொழும்பு திசையிலிருந்து கொழும்பு திசையை நோக்கி சென்று கொண்டிருந்த பாதாள உலகக் கோஸ்டியினர் பயணித்த வேனை விசேட அதிரடிப்படையினர் டிப்பென்டர் வண்டியில் துரத்தி வந்தபோது நீர்கொழும்பு – கொழும்பு பிரதான வீதியில் குரணை பிரதேசத்தில் கிரேண்டேசியா (Grandeeza Hotel) ஹோட்டல் அருகில் வைத்து வேனில் பயணித்தவர்களில் ஒருவர் விசேட அதிரடிப்படையினர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

இதனை அடுத்து இரு தரப்பினருக்குமிடையில் துப்பாக்கிச் சமர் இடம்பெற்றுள்ளது. இதன்போது வேனில் பயணித்த பாதாள உலகத்தைச் சேர்ந்த நான்கு பேரில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டதுடன் காயமடைந்த இருவரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சம்பவத்தை அடுத்து இரண்டு வாகனங்களினதும் ஒரு பகுதி அருகில் உள்ள வடிகானில் சரிந்துள்ளன. பாதாள உலகத்தினர் பயணித்த வேனில் இருந்து துப்பாக்கிகள், மற்றும் வாகன இலக்கத் தகடுகள், கைவிலங்கு என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

IMG_2736 IMG_2737 IMG_2738 IMG_2741

Web Design by The Design Lanka