நீர்கொழும்பு பெரியமுல்லை நலன்புரிச் சங்கத்தின் கட்டார் கிளையின் மூன்றாவது பொதுக்கூட்டம் - Sri Lanka Muslim

நீர்கொழும்பு பெரியமுல்லை நலன்புரிச் சங்கத்தின் கட்டார் கிளையின் மூன்றாவது பொதுக்கூட்டம்

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

கட்டாரில் இருந்து செய்திகளுக்காக நீர்கொழும்பு முஸாதிக் முஜீப்

நீர்கொழும்பு பெரியமுல்லை நலன்புரிச் சங்கத்தின் கட்டார் கிளையின் மூன்றாவது பொதுக்கூட்டம் நேற்று 6ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் நடைபெற்றது.

இச்சங்கத்தின் கட்டார் கிளையின் தலைவர் ஏ.எம் உமர் அவர்களின்
தலைமையில் துமாமாவில் அமைந்துள்ள அல் ஆயிஷா பள்ளிவாசலில் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்திற்கு சுமார் 50ற்கும் மேற்பட்ட பெரியமுல்லை வாலிபர்கள் சமூகமளித்திருந்தனர்.

நீர்கொழும்பு பெரியமுல்லை பகுதியில் வரிய கோட்டிற்கு கீழ் வாழ்கின்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் முகமாக அமைக்கப்பட்ட இச்சங்கம் மூன்று மாத கால எல்லைக்குள் சுமார் 12 ற்கும் மேற்பட்ட செயற்திட்டங்கள் நீர்கொழும்பு பெரியமுல்லை பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் 7 செயற்திட்டங்கள் நிலுவையில் உள்ளதாகவும் அவையாவன விரைவில் நிறைவேற்றப்படவுள்ளதாகவும் இச்சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார்.

மேலும் இச்சங்கத்தின் செயற்பாடுகள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றது என்றும் இச்சங்கத்தின் செயலாளரால் உறுப்பினர்களுக்கு படக்காட்சியுடன் விளக்கம் வழங்கப்பட்டது.

இதன் போது இச்சங்கத்தின் பொருளாளராள் கடந்து மூன்று மாதத்திற்கான வரவு செலவும் முன்வைக்கப்பட்டது.

n n.jpg2 n.jpg2.jpg3 n.jpg2.jpg4

 

Web Design by Srilanka Muslims Web Team