நீர்ப்பாசன வாரத்தை முன்னிட்டு பொத்துவில் சிறுகுளங்களின் குளக்கரை சிரமதான நிகழ்வு - Sri Lanka Muslim

நீர்ப்பாசன வாரத்தை முன்னிட்டு பொத்துவில் சிறுகுளங்களின் குளக்கரை சிரமதான நிகழ்வு

Contributors
author image

A.M.தாஜகான்- Pottuvil (M.A. M.ED)

நீர்ப்பாசன வாரத்தை முன்னிட்டு இன்று பொத்துவில் உடகோவை கமக்காரர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதான நிகழ்வும் குளங்களை பார்வையிடலும் (நேற்று 08) உடகோவையில் வெகு விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்டது.

உடகோவை கமக்கார அமைப்பின் தலைவர் ஏ.எம். நசூர்தீன் (றபீக்) அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் பொத்துவில் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எல். அப்துல் றகீம் அதிதியாகக் கலந்து கொண்டு சிரமதானத்தை ஆரம்பித்து வைத்தார். பெருந்தொகையான உடகோவை போடிமார்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் உடகோவை அமைப்பின் செயலாளர் ஏ.எம். றசிட், பொருளாளர். எம். சஹாப்தீன் ஆகியோரும் கலந்து கொண்டு நெறிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

அவ்வாறே பொத்துவில் புதுவெளிக்குளக்கட்டு பார்வையிடலும் சிரமதான முறையும் புதுவெளி அமைப்பின் தலைவர் ஏ.ஆர். றியாஸ் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் பொத்துவில் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எல். அப்துல் றகீம் அதிதியாகக் கலந்து கொண்டு சிரமதானத்தை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் கமநல அபிவிருத்தி சமாஜத்தின் தலைவர் எஸ். நவாஸ் அவர்களும் கலந்து கொண்டு நெறிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team