நுவரெலியாவுக்கு வருவதை தவிர்க்குமாறு அரசாங்க அதிபர் வேண்டுகோள்..! - Sri Lanka Muslim

நுவரெலியாவுக்கு வருவதை தவிர்க்குமாறு அரசாங்க அதிபர் வேண்டுகோள்..!

Contributors

– டி சந்ரு –

சின்ன இங்கிலா​ந்து என வர்ணிக்கப்படும் நுவரெலியாவுக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

நுவரெலியாவுக்கு வருகைதருவதை  தவிர்க்குமாறு அரசாங்க அதிபர் அறிவித்தல் விடுத்திருந்த போதிலும், நுவரெலியா நகருக்கும் அதனை அண்மித்த பிரதேசங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் நேற்றையதினம் படைபெடுத்திருந்தமை அவதானிக்க முடிந்தது.

அவ்வாறு  வருகைத்தந்தவர்களில் பலர் முக்கவசம் அணியாதும் கொரோனா தொற்றை தவிர்ப்பதற்கான, சுகாதார விதிமுறைகளை பேணாமலும் நடமாடியமையை அவதானிக்க முடிந்தது.

இதனால், நுவரெலியா வாழ் மக்கள் கொரோனா தொற்று அச்சம் கொண்டுள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team