நுவரெலியா நகரில் ஒக்டோபர் 6ஆம் திகதி அதிபர், ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்..! - Sri Lanka Muslim

நுவரெலியா நகரில் ஒக்டோபர் 6ஆம் திகதி அதிபர், ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்..!

Contributors

ஆசிரியர் விடுதலை முன்னணி ஏனைய ஆசிரியர் தொழிற்சங்கங்களுடன் இணைந்து நாளை மறுதினம் (6.10.2021) புதன்கிழமை காலை நுவரெலியா மாநகரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக ஆசிரியர் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் என்.டி.எஸ்.நாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், நாடளாவிய ரீதியில் அதிபர்,ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்விசார் ஊழியர்களும் கல்விசாரா ஊழியர்களும் சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத் தருமாறு கடந்த 24 வருடங்களாகக் கோரி வருகின்றனர். ஆனால் அதிபர், ஆசிரியர்களின் போராட்டங்களின் நியாயப்பாடுகளை முழுமையாக விளங்கிக்கொண்டும் அரசு தொடர்ந்து இழுத்தடிப்புச் செய்து வருகின்றது. சம்பள முரண்பாட்டுக்கான தீர்வை அரசாங்கம் இதுவரை வழங்கவில்லை.

ஆகவே எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கோரியே ஆசிரியர் தினத்தில் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கின்றோம். இது அரசுக்கோ, அரசியல்வாதிகளுக்கோ எதிரான போராட்டம் அல்ல. அதிபர், ஆசிரியர்களின் போராட்டத்துக்கு நியாயமான தீர்வை வழங்கக் கோரியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

கொவிட் -19 கொரோனா தொற்றின் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நுவரெலியா நகர மத்தியில் மிகவும் அமைதியான முறையில் நடைபெறும்.

மேலும் அன்றைய தினம் வலப்பனை, கொத்மலை,அட்டன் அடங்கலாக நாடளாவிய ரீதியில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team