கருமரலயூற்று பள்ளிவாசல் விவகாரத்தில் அமைதியாகிப்போன முஸ்லிம் தரப்பு - Sri Lanka Muslim

கருமரலயூற்று பள்ளிவாசல் விவகாரத்தில் அமைதியாகிப்போன முஸ்லிம் தரப்பு

Contributors
author image

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

திருகோணமலை கரிமலையூற்று பள்ளிவாசல் உடைக்கப்பட்டு ஒரு மாதத்துக்கும் லேமலாகி விட்டது. புனரமைப்பு பணிகள் இடம்பெறுவதாக கொழும்பு இராணுவம் தெரிவித்தது. இரு வாரங்களுக்குள் புனரமைப்பு வேலைகள் முடிந்து விடுமென திருமலை இராணுவ தலைமைகள் தெரிவித்ததாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் அன்றே தெரிவிந்தார். ஆனால், இன்று அனைத்தும் அடங்கிய நிலையில் உள்ளன.

 

இந்தப் பள்ளி உடைக்கப்பட்ட விடயம் தொடர்பான அவசர பிரேரணையை முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதி அன்வர் கிழக்கு மாகாண சபை கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முன்வைத்தார். இந்த நிலையில் நேரடியாகப் பார்வையிட குழு நியமிக்கப்பட்டது.

 

இக்குழுவில் எதிர்கட்சித் தலைவரும் சேர்க்கப்பட்டார். இதேவேளை ஜெமீல் பள்ளிவாசல் 400 ஆண்டு பழமை வாய்ந்தது. அவ்வாறான பள்ளியை இராணுவத்தினர் புனரமைக்க வேண்டியதில்லை. அதனை அவர்கள் உடன் நிறுத்த வேண்டும் எமது குழு மார்க்க முறைப்படி பார்வையிட்டு அதனை செய்ய வேண்டும் எனவும் முதலமைச்சரைக் கேட்டுக் கொண்டார்.

 

சபை முடிவின் போது பதிலளித்த கிழக்கு மாகாண முதலமைச்சர் தான் படைத்தளபதியுடன் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற்று குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்ட போது கூரைகளின் பகுதியும் கட்டடமும் வீழ்த்தப்பட்ட நிலையிலும் காணப்பட்டதாக கூறினார்.

 

 பின்னர் தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் படைத்தளபதியோடு பேசி குறித்த பள்ளிவாசலின் கட்டட பணிகள் மேற்கொண்டு வருவதாகவும் கூறினார் என்றெல்லாம் செய்திகளும் தகவல்களும் சில நாட்கள் பரபரப்பாக வெளிவந்தன..

 

 இப்போது எல்லாம் முஸ்லிம் தரப்பும் அமைதியாகி விட்டனர். இதுதான் எல்லாம் விடயத்துக்கும் நடப்பன. இதனை அரசாங்கமும் நன்கறிந்து கொண்டே தனது காரியங்களை கச்சிதமாக முன்னெடுக்கின்றன.

Web Design by Srilanka Muslims Web Team