நெத்தலி முதல் பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் பேட்கள் வரையில் அனைத்திற்கும் வரி - ரணில் - Sri Lanka Muslim

நெத்தலி முதல் பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் பேட்கள் வரையில் அனைத்திற்கும் வரி – ரணில்

Contributors

அரசாங்கம் கொமிஷன்களை அமைப்பது கொமிஸ் அடிப்பதற்காகவே என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.ஒன்று முடிவடையும் போது மற்றொன்று என அரசாங்கம் ஆணைக்குழுக்களை அமைத்துஅதன் ஊடாக தரகுப் பணத்தைப் பெற்றுக்கொள்கின்றது.

அரசாங்கத்தின் ஆணைக்குழுக்களினால் மக்களுக்கு நன்மை ஏற்பட்டதில்லை. நெத்தலி முதல் பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் பேட்கள் வரையில் அனைத்திற்கும் வரி விதிக்கப்படுகிறது.இன்னும் கொஞ்ச காலத்தில் மலசல கூடங்களுக்கும் வரி விதிக்கப்படலாம்.

நிவாரணம் வழங்க பணம் இல்லை என்ற அரசாங்கம் மத்தளை விமான நிலையம், சூரியவெவ விளையாட்டரங்கு என்பனவற்றை அமைத்துள்ளது.கசினோ சூதாட்டத்திற்கு 25 ஆண்டுகால வரிவிலக்கு வழங்கப்படவுள்ளது.

அரசாங்கம் மக்களின் ஊழியர் சேமலாப நியத்தை கொள்ளையிட்டுள்ளது.2005ம் ஆண்டில் 1.8 டிரில்லியனாக காணப்பட்ட கடன், எட்டு ஆண்டுகளில் 6.6 டிரில்லியனாக உயர்வடைந்துள்ளது.

நாட்டில் வீதிகள் அமைக்கப்பட்டு வருகின்ற போதிலும் உலகின் ஏனைய நாடுகளை விடவும் ஒரு கிலோ மீற்றருக்கு இரண்டு அல்லது மூன்று மடங்கு பணம் செலவிடப்படுவதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team