நெப்கின்களை சேகரித்து 39 வயது பெண் உலக சாதனை! - Sri Lanka Muslim

நெப்கின்களை சேகரித்து 39 வயது பெண் உலக சாதனை!

Contributors

மத்திய ஐரோப்பா நாடுகளில் ஒன்றான Slovakia என்ற நாட்டில் 39 வயது பெண் ஒருவர் 62,757 விதவிதமான நெப்கின்களை சேகரித்து உலக சாதனை புரிந்துள்ளார். அவற்றின் மதிப்பு 300,000 பவுண்டுகள் ஆகும்.

Slovakian என்ற நாட்டை சேர்ந்த 39 வயது Antonia Kozakova என்ற பெண், சிறுவயதில் இருந்தே விதவிதமான நெப்கின்களை சேகரிக்கும் பழக்கம் உடையவர். கடந்த 2007 ஆம் ஆண்டு 21,000 விதமான நாப்கின்களை சேகரித்து முதன்முதலில் உலக சாதனை செய்தார். மேலும் அவர் தன்னுடைய சாதனையை ஏற்கனவே இரண்டு முறை உடைத்து மேலும் மேலும் விதவிதமான நாப்கின்களை சேகரிப்பதில் விருப்பம் கொண்டார்.

தற்போது அவரிடம் 62,757 வகையான நாப்கின்கள் இருக்கின்றன. இதுதான் தற்போதைக்கு உலகசாதனையாக கருதப்படுகிறது. இவர் தன் வீடு முழுவதும் விதவிதமான நாப்கின்களை அடுக்கி வைத்துள்ளார். இந்த சாதனை காரணமாவே இவர் திருமணமே செய்யாமல் தனியாக வாழ்ந்துவருகிறார். மேலும் இவர் தான் 100,000 விதமான நாப்கின்களை சேகரிக்கவேண்டும் எனபதே தன்னுடைய விருப்பம் என்று பேட்டியளித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team