நெல்சன் மண்டேலாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி !!(படங்கள்) - Sri Lanka Muslim

நெல்சன் மண்டேலாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி !!(படங்கள்)

Contributors

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டே லாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இறுதி அஞ்சலி செலுத்தினார். மறைந்த தென்னாபிரிக்காவின் முன் னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் பூதவுடவுலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கும்,அவரது ஞாபகார்த்த ஆராதணை களில் கலந்து கொள்வதற்கும் தென்னாபிரிக்கா சென்ற ஜனா திபதி ஜொஹான்னஸ் பேர்க்கிலுள்ள குடே மைதானத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.

அங்கிருந்து பிரிட்டோரியா நோக்கி சென்ற ஜனாதிபதி யூனியன் கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ள மண்டேலாவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். 1994ம் ஆண்டு தென்னாபிரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியாக தேர்ந்தெ டுக்கப்பட்டதன் பின்னர் நெல்சன் மண்டேலா யூனியன் கட்டிடத்தில் வைத்து சத்தியபிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் நினைவஞ்சலி நிகழ்வில் உலகத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில்கிளின்டனை சந்தித்த போது….

Web Design by Srilanka Muslims Web Team