நேபாளத்தில் தரையிறங்கும் போது நொறுங்கி விழுந்த விமானம் : 38 பேர் பலி » Sri Lanka Muslim

நேபாளத்தில் தரையிறங்கும் போது நொறுங்கி விழுந்த விமானம் : 38 பேர் பலி

fligh.jpg2

Contributors
author image

Editorial Team

(BBC)


நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச நிலையத்தில், 71 பேருடன் பயணித்த விமானம் நொறுங்கி விழுந்ததில் குறைந்தது 38 பேர் கொல்லப்பட்டனர். குறைந்தது 17 பேர் உயிர்பிழைத்துள்ளனர்.

திங்கள்கிழமை பகலில் தரையிறங்கும் போது வங்கதேச விமான சேவை விமானம் ஒன்று விமான ஓடுதளத்தில் இருந்து விலகி சென்றதால் தீ பிழம்பு உண்டானது. மீட்பு படையினர் சிதைந்த விமானத்தில் இருந்து உடல்களை மீட்டனர்.

திரிபுவன் சர்வதேச நிலையத்தின் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன

சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் விமான நிலைய ஓடுதளத்தில் இருந்து புகை எழும்புவதை காண்பிக்கின்றன.

விபத்துக்குள்ளான விமானம் உள்ளூர் ஊடகங்களில் S2-AGU என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆனால், இதனை அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் உறுதி செய்யவில்லை.

fligh fligh.jpg2

Web Design by The Design Lanka