நேர்மையாக மக்களுக்கு சேவையாற்றிய ஒரு கணவான் ஜப்பார் அலி - அனுதாபச் செய்தியில் ஹரீஸ் » Sri Lanka Muslim

நேர்மையாக மக்களுக்கு சேவையாற்றிய ஒரு கணவான் ஜப்பார் அலி – அனுதாபச் செய்தியில் ஹரீஸ்

harees

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

(ஹாசிப் யாஸீன், றியாத் ஏ. மஜீத்)


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்த உறுப்பினரும், நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.ரீ. ஜப்பார் அலியின் மறைவு கட்சிக்கும் சமூகத்திற்கும் பேரிழப்பாகும் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி அல்-ஹாஜ் எச்.எம்.எம்.ஹரீஸ் தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்த உறுப்பினரும், நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.ரீ. ஜப்பார் அலி விபத்துக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று (12) வியாழக்கிழமை காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அனுதாபச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜப்பார் அலி கட்சிக்கு நிந்தவூரில் சவால் ஏற்பட்டபோது சுயநலமின்றி தனது உடன் பிறப்பு என்றுகூட பார்க்காமல் கட்சியினை பாதுகாத்து, பலப்படுத்தும் நடவடிக்கையினை மேற்கொண்ட மூத்த போராளி.

தனது அரசியல் பொது வாழ்க்கையில் நேர்மையாக நிந்தவூர் மக்களுக்கு சேவையாற்றிய ஒரு கணவான்.

கட்சியின் அம்பாறை மாவட்ட குழுவின் செயலாளராக திறன்பட செயப்பட்டு கட்சியின் செயற்பாடுகளையும், அபிவிருத்தி பணிகள் என்பவற்றை மாவட்டத்தின் சகல ஊர்களிலும் கொண்டு செல்லும் முயற்சியில் முன்னின்று உழைத்தவர்.

எல்லோரிடமும் அன்பாகவும் மரியாதையாகவும் பலகும் இவர் நல்ல குணாலனாவார்.

அன்னாரின் மறைவில் துயருட்டிருக்கும் குடும்பத்தார், உற்றார் உறவினர்கள், கட்சியின் போராளிகள் அனைவருக்கும் என ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு அன்னாருக்கு எல்லாம் வல்ல இறைவன் ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவர்க்கத்தை வழங்க பிரார்த்திப்போம்.

Web Design by The Design Lanka