நேற்றைய பசறை பஸ் விபத்து குற்றங்களுக்கு யார் காரணம்? சிந்திப்போமா..! - Sri Lanka Muslim

நேற்றைய பசறை பஸ் விபத்து குற்றங்களுக்கு யார் காரணம்? சிந்திப்போமா..!

Contributors

நேற்று நடந்த பஸ் விபத்து நிறையப் பேரின் மனதை உலுக்கி இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் எல்லோரும் டிப்பர் ட்ரைவரையும், பஸ் ட்ரைவரையுமே குற்றம் சுமத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இருவரும் கொஞ்சம் ஸ்லோவாக வந்திருந்தால் இந்த விபத்து நடந்திருக்காதே என்று அங்கலாய்க்கிறார்கள்.

விபத்து நடைபெற்ற காணொளியை கவனமாகப் பார்க்கின்ற போது குற்றம் டிரைவர்கள் மீது மட்டுமல்ல இன்னும் பலர் இதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்களாக இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

பஸ்களை கொன்ட்ரோல் இல்லாமல் ஓவர் ஸ்பீட்டில் ஓட விட்டது யார் குற்றம்? பயணிகளின் குற்றமா?
அல்லது சட்டத்தின் பெயரைச் சொல்லி வயிறு வளர்க்கும் பொலிஸாரின் குற்றமா?

உயிர் பறிக்கும் ட்ரைவர்கள் கூட்டத்தை வளரவிட்டது யார் குற்றம்? லைசன்ஸ் எடுப்பவர்களின் குற்றமா? அல்லது லைசன்ஸ் கொடுப்பதற்கு லஞ்சம் வாங்குபவர்களின் குற்றமா?

வீதி அபிவிருத்தியின் பெயரால் சம்பளம் வாங்கும் RDA அதிகாரிகளை இடது பக்கம் விழுந்து கிடந்த அந்தப் பெரிய கல்லை அகற்றாமலும், வலது பக்கம் ஓரம் பழுதடைந்த வீதியை திருத்தாமலும் சும்மா சம்பளம் வாங்க விட்டது யார் குற்றம்? பொது மக்கள் குற்றமா? அல்லது பொது மக்களின் பெயரைச் சொல்லி அரசியல் நடத்தும் அரசியல் கயவர்களின் குற்றமா?

இக்குற்றங்கள் களையப்படும் வரை இது போன்ற விபத்துகளும் இறப்புக்களும் குறையப்போவதில்லை என்பது மட்டும் உண்மை.

Web Design by Srilanka Muslims Web Team