நைஜீரியா மசூதியில் தற்கொலை குண்டு தாக்குதல்: 24 பேர் பலி » Sri Lanka Muslim

நைஜீரியா மசூதியில் தற்கொலை குண்டு தாக்குதல்: 24 பேர் பலி

_101121397_nigeriabomb

Contributors
author image

BBC

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் மசூதி ஒன்றில் நிகழ்ந்த இரட்டை தற்கொலை குண்டு தாக்குதலில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள முபி நகரில் உள்ள இந்த மசூதியில் பிற்பகல் தொழுகைக்காக முஸ்லிம்கள் தயாராகிக் கொண்டிருந்த நிலையில் மசூதிக்கு உள்ளேயும், வெளியேயும் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன.

இஸ்லாமியவாதக் குழுவான போகோ ஹராம் இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக அடமாவா மாகாணக் காவல்துறை தெரிவித்துள்ளது. வடக்கு நைஜீரியாவில் இஸ்லாமிய அரசு ஒன்றை உருவாக்குவதற்காக 2009 முதல் வன்முறைத் தாக்குதல்களைத் தொடுத்து வந்தது போகோ ஹராம். இந்த வன் செயல்களால் 20 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். 20 லட்சத்துக்கும் அதிகமானோர் புலம் பெயர்ந்தனர்.

நைஜீரியா வரைபடம்

பிற்பகல் 1 மணிக்கு மசூதியில் முதல் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாகவும், தொழுகையாளர்கள் தப்பி ஓடியபோது மற்றொரு குண்டுதாரி மசூதிக்கு அருகே குண்டினை வெடிக்கச் செய்ததாகவும் மாகாண போலீஸ் ஆணையர் அப்துல்லாஹி யெரிமா தெரிவித்தார்.

ஒரு டஜனுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

Web Design by The Design Lanka