பகலில் கல்லூரி, இரவில் விபச்சார விடுதி! இது நாக்பூர் பெண்களின் உலகம் - Sri Lanka Muslim

பகலில் கல்லூரி, இரவில் விபச்சார விடுதி! இது நாக்பூர் பெண்களின் உலகம்

Contributors

நாக்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான இளம் பெண்கள், பகலில் கல்லூரிப் பெண்கள் போலவும், ராத்திரியானால் விபச்சாரத்திலும் ஈடுபட்டு வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
வாடி, ஹிங்கனா, கல்மேஸ்வர், கம்ப்டீ உள்ளிட்ட நாக்பூரைச் சுற்றியுள்ள சிறிய ஊர்கள், கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான இளம் பெண்கள் நாக்பூரில் கல்லூரியில் படிக்க வருகின்றனர்.

இவர்களில் பெரும்பாலானவர்களில் கல்லூரி முடிந்ததும் இரவில் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றனராம்.

அதேபோல பல இளம் பெண்கள் வேலை பார்ப்பதாக கூறி நாக்பூரில் வந்து தங்கி அங்கு விபச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களது படிப்புச் செலவு, குடும்பச் செலவுக்காக விபச்சாரத்தில் ஈடுபடுவதாக கூறுகின்றனர். ஆனால் பலர் ஆடம்பரமாக வாழ்க்கை நடத்த விபச்சாரத்தை நாடுவதாக கூறுகின்றனர்.

இதுகுறித்து நாக்பூரைச் சேர்ந்த வர்ஷா பாக்ளே என்ற சமூக சேவகி கூறுகையில், பல இளம் பெண்கள் தொலை தூரத்திலிருந்து வந்து நாக்பூரில் தங்குகின்றனர். படிக்கவும், வேலை பார்க்கவும் வரும் இவர்கள் தங்களது குடும்பத்தைக் காக்கவும், தங்களது செலவுகளுக்காகவும் இரட்டை வாழ்க்கை நடத்துகின்றனர்.

இவர்களுக்கு 18 முதல் 25 வயதுக்குள்தான் உள்ளது. அதேசமயம், இவர்கள் அனைவரும் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறி விட முடியாது.

இதில் நல்ல வசதி படைத்த பெண்களும் உள்ளனர் என்றும் இவர்கள் ஆடம்பரமான வாழ்க்கைக்காகவும், ஜாலிக்காகவும் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றனர் எனவும் கூறியுள்ளார்.

மேலும் விபச்சாரத்தில் ஈடுபடும் பல இளம் பெண்கள் கலை, அறிவியல், வணிகப் படிப்புகளைப் படித்து வருபவர்கள் ஆவர். இந்தப் பெண்களுக்கு பணத்தின் மீதான மோகம் அதிகமாக இருக்கிறது. கை நிறையப் பணத்தைப் பார்த்து விரும்பியே இந்த தொழிலுக்கு வருகின்றனர்.

பலர் நேரடியாக வாடிக்கையாளர்களிடம் பணத்தைப் பெறுகின்றனர். சிலர் புரோக்கர்கள் மூலமாக பணத்தைப் பெறுகின்றனர்.

மேலும் இந்தப் பெண்கள் ஒவ்வொருவரும் ஏகப்பட்ட சிம் கார்டுகளை வைத்துள்ளனர். குறைந்தது 5 முதல் 6 சிம் கார்டுகளை இவர்கள் வைத்துள்ளனர், தங்களுக்குப் பிடித்த வாடிக்கையாளர்களிடம் எண்களையும் கொடுத்துக் கொள்கின்றனர்.

இவர்கள் ஒரு இரவுக்கு குறைந்தது 6000 வசூலிக்கின்றனர். சிலர் ரூ. 10,000 வரை கூட சம்பாதிக்கின்றனர். சில பெண்கள் மணிக்கணக்கிலும் ரேட் பேசி வருகின்றனர். அதாவது ஒரு மணி நேரத்திற்கு ரூ. 1500 முதல் 2000 வரை இவர்கள் வசூலிக்கின்றனர்.

பல பெண்கள் இந்தப் பணத்தை வைத்து ஆடம்பரமாக செலவிடுகிறார்கள். விலைமதிப்பான கைப்பேசிகள் வாங்குகிறார்கள். மேக்கப் சாதனங்களை வாங்கிக் குவிக்கிறார்கள் மற்றும் விதம் விதமான ஆடைகளை வாங்கிப் போட்டுக் கொள்கின்றனர்.

நாக்பூரில் தொழில்முறை செக்ஸ் தொழிலாளர்கள் 300 பேர் உள்ளனர், இவர்களில் முக்கால்வாசிப் பேர் மாணவிகளே என்று தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team