பங்களாதேஷ் சுதந்திர போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு பங்களாதேஷில் அஞ்சலி செலுத்திய இலங்கை பிரதமர் . - Sri Lanka Muslim

பங்களாதேஷ் சுதந்திர போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு பங்களாதேஷில் அஞ்சலி செலுத்திய இலங்கை பிரதமர் .

Contributors

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பங்களாதேஷ் விஜயத்தின் ஓர் அங்கமாக பங்களாதேஷ் சுதந்திர

போரில் உயிர்நீத்த வீரர்களின் தேசிய தியாகிகள் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.


இதன்போது, பங்களாதேஷின் இராஜதந்திர அதிகாரிகளும் கலந்துகொண்டதுடன், அந்நாட்டு விருந்தினர் புத்தகத்திலும் சிறப்பு குறிப்பொன்றை பிரதமர் மஹிந்த வெளியிட்டார்.அக்குறிப்பு, “பங்களாதேஷ் சுதந்திர போரின்போது தங்களின் உயிரை தியாகம் செய்த பங்களாதேஷ் மக்கள் செய்த தியாகங்களின் நினைவாக மரியாதை செலுத்துவதை ஒரு பாக்கியமாக நான் கருதுகிறேன்.“பங்களாதேஷின் சுதந்திரத்தை போற்றும் அனைவரதும் எதிர்காலத்துக்காக தங்கள் உயிரை தியாகம் செய்த அனைத்து பங்களாதேஷ் மக்கள், சுதந்திரமான, பெருமை வாய்ந்த பங்களாதேஷை உருவாக்கும் பங்கபந்து ஷெயிக் முஜிபுர் ரஹ்மானின் (Bangabandhu Sheikh Mujibur Rahman) கனவுக்கு சிறந்த சாட்சியாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team