பசில் ராஜபக்சவுடன் விமானத்தில் இணைந்து வந்த அந்த பிரபல அரசியல்வாதி யார்..? - Sri Lanka Muslim

பசில் ராஜபக்சவுடன் விமானத்தில் இணைந்து வந்த அந்த பிரபல அரசியல்வாதி யார்..?

Contributors

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நேற்று அமெரிக்காவில் இருந்து இலங்கை திரும்பிக்கொண்டிருந்த போது அதே விமானத்தில் சுமார் ஒன்றரை மாதங்கள் வெளிநாட்டில் தங்கியிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் அவருடன் நாடு திரும்பியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த சமரசிங்கவே இவ்வாறு பசிலுடன் நாடு திரும்பியுள்ளார்.

இரண்டு பேரும் ஒரே விமானத்தில் இலங்கை திரும்பியது தற்செயலானதா அல்லது திட்டமிட்ட செயலாக மகிந்த சமரசிங்கவிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், அது தற்செயலாக நடந்தது எனக் கூறியுள்ளார்.

தான் சுவிஸர்லாந்தில் இருந்து இலங்கை வரும் வழித்தடம் துபாய் ஊடாக இருந்தது எனவும் பசில் ராஜபக்சவும் அமெரிக்காவில் இருந்து இலங்கை செல்லும் வழித்தடம் துபாய் ஊடாக இருந்து என சுட்டிக்காட்டியுள்ள சமரசிங்க, துபாயில் இருந்து இலங்கை வரும் விமானத்தில் இருவரும் சந்தித்துக்கொண்டதாக கூறியுள்ளார்.

இந்த விமானப் பயணம் சுமார் 4 மணி நேரமாக இருந்தது எனவும் அவர் கூறியுள்ளார். இதன் போது குறிப்பாக என்ன பேசினீர்கள் என செய்தியாளர்கள், மகிந்த சமரசிங்கவிடம் கேட்டுள்ளனர்.

இதற்கு பதிலளித்துள்ள அவர், நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் பற்றி பேசியதாக குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் இலங்கை எதிர்நோக்கும் முக்கியமான பிரச்சினைகளில் முக்கியமான தலையீடுகளை மேற்கொள்ளும் மற்றும் சிறந்த திட்டங்கள் பசில் ராஜபக்சவிடம் இருப்பது அவருடன் பேசிய போது உணர்ந்துகொண்டதாகவும் மகிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team