பசீல் ராஜபக்க்ஷவின் “கிராமத்திற்கொரு தொழில் முயற்சியாளர் செயற்திட்டம்” காரைதீவில் ஆரம்பம் ! - Sri Lanka Muslim

பசீல் ராஜபக்க்ஷவின் “கிராமத்திற்கொரு தொழில் முயற்சியாளர் செயற்திட்டம்” காரைதீவில் ஆரம்பம் !

Contributors

நூருல் ஹுதா உமர்

நிதி அமைச்சர் பசீல் ராஜபக்க்ஷவின் எண்ணக்கருவில் நாடுமுழுவதும் 14000 புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் “கிராமத்திற்கொரு தொழில் முயற்சியாளர் செயற்திட்டம்” தொனிப்பொருளில் தெரிவுசெய்யப்பட்ட காரைதீவு பிரதேச பயனாளர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு இன்று (23) காரைதீவு பிரதேச செயலாளர் சி. ஜெகராஜன் தலைமையில் காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கோவிட் 19 காரணமாக சுகாதார வழிமுறைகளை பின்பற்றி காரைதீவு பிரதேச செயலக விதாதா வள நிலைய விஞ்ஞான தொழிநுட்ப உத்தியோகத்தர் எல். அஸ்வரினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கு காரைதீவு பிரதேச செயலாளர் சி.ஜெகராஜன் முயற்சியாளராவதற்குரிய தெளிவூட்டல்களை வழங்கினார்.

Web Design by Srilanka Muslims Web Team