பசும்பாலுக்கு பதிலாக மூஸ் இன பால்! ஐ.நா முடிவு - Sri Lanka Muslim

பசும்பாலுக்கு பதிலாக மூஸ் இன பால்! ஐ.நா முடிவு

Contributors

உலக நாடுகளில் பெரும்பாலும் பசும்பால் தான் உணவுப் பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இவை தவிர சிலர் ஒட்டகம், ஆடுகள், கழுதைகள் மற்றும் எருமைகளின் பால்களை பயன்படுத்துகின்றனர்.

ஆனால் ஐ.நாவால் அங்கீகரிக்கப்பட்ட பாலாக பசும் பால் திகழ்கிறது.

ஏனெனில் அதில் கொழுப்பு, புரோட்டீனுடன் லேக்டோஸ் என்ற சத்தும் உள்ளது.

இந்நிலையில் உலகளவில் மக்கள் தொகை பெருகிக் கொண்டே செல்வதால், போதிய அளவு பால் கிடைப்பதில்லை.

எனவே இதற்கு பதிலாக வேறு ஒரு உயிரினத்தின் பாலை அங்கீகரிப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி மூஸ் இன மான் மற்றும் கலைமான் பாலை பயன்படுத்தலாம் என ஐ.நா சபையின் உணவு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பசும்பாலில் உள்ளது போன்றே புரோட்டீன் மற்றும் கொழுப்பு சத்துக்கள் இருந்தாலும், லேக்டோஸ் பாதி அளவு மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team