“பச்சை இரத்தம் நீந்தும் காடு” கவிதை நூல் வெளியீடு » Sri Lanka Muslim

“பச்சை இரத்தம் நீந்தும் காடு” கவிதை நூல் வெளியீடு

6-PMMA CXADER-01-12-2017

Contributors
author image

P.M.M.A.காதர்

இலங்கை நிருவாகசேவை அதிகாரியான மருதமுனையைச் சேர்ந்த முகம்மதுத்தம்பி  முகம்மது நௌபல் எழுதிய ‘பச்சை இரத்தம் நீந்தும் காடு’ கவிதை நூல் வெளியீடு அண்மையில் (26-11-2017) மருதமுனை கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.

கவிஞரும்,சட்டத்தரணியுமான ஏ.எல்.றிபாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, கௌரவ அதிதியாக கவிஞர் ஆசுகவி அன்புடீன் ஆகியோர்; கலந்து கொண்டனர்.

மருதமுனை கலை இலக்கிய பேரவையின் தலைவர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் வரவேற்புரை நிகழ்த்தினார்.பேராசிரியர் திரு.யோகராசா,எழுத்தாளர் உமாவரதராஜன், ஆய்வாளர் சிராஜ் மசூர்.கவிஞர் விஜிலி ஆகியோர் நூல்பற்றி உரையாற்றினார்கள் பிறை எப்.எம்.கட்டுப்பாட்டாளர் பஷீர் அப்துல் கையூம் நிகழ்வைத் தொகுத்து வழங்கினார்.

பிரதம அதிதி எஸ்.எல்.எம்.ஹனீபா உரை
அட்டாளைச்சேனையின் கல்வி வரலாற்றிலே ஒரு பாரிய மாற்றத்தையும், பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தியவர் மருதமுனை மண்ணின் மூத்த கல்விமான் மர்ஹூம் ஏ.ஆர்.ஏ.அஸீஸ் ஆவார். அவரது கல்விப்பணி எங்களுக்கு நல்ல வழிகாட்டியிருக்கிறது.

மருதமுனையின் இலக்கிய வரலாற்றிலே புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன்,மருதூர் கொத்தன்,மருதூர்கனி,மருதூர் வாணர,ஜின்னாஹ் ஷரிபுத்தீன் என நீண்ட பட்டியல் இருக்கிறது.இவர்கலெல்லாம் இலக்கியத்திற்காக தங்களை அர்பணித்து செயற்பட்டவர்கள்.

சமூத்திலே இருக்கின்ற சீர்கேடுகள்,பிரச்சினைகள்,ஆண்,பெண் சமத்துவமின்மை பொன்ற பல பிரச்சினைகளை நாங்கள் உள்வாங்குகின்ற போது இவ்வாறான இலக்கிய சிந்தனைகளை சமூகத்திலே விதைத்தால் எதிர்காலத்திலே நல்ல திர்வு கிடைப்பதற்கு வாய்ப்ப இருக்கின்றது.

தலைமை உரை கவிஞர் ஏ.எல்.றிபாஸ்
கவிஞர் நௌபலின் இலக்கியப் பயணம் ஆளுமையுடன் விரிவடைந்து செல்கின்றது அவரது இந்த ‘பச்சை இரத்தம் நீந்தும் காடு’ கவிதை நூலிலே சமூக அக்கறையுடனான கவிதைகளும்,காதல் விரகம் தாகம் கொண்ட கவிதைகளும் காணப்படுகின்றது.

கவிஞர் நௌபலின் கவிதைகள் தொடர்பான பார்வையிலே எழுத்தாளர்  உமாவரதராஜன்,எஸ்.எல்.எம்.ஹனிபா ஆகியோர் மிகவும் சிறப்பான உரையை வழங்கியிருக்கின்றார்கள்.அந்த வகையிலே அவரது இலக்கியப்பயணம் சிறப்பாக அமைய வேண்டும் என பிரார்த்திற்கின்றேன்.\

எழுத்தாளர் உமா வரதராஜன்
நண்பர் நௌபலின் கவிதைகள் காதலால் நனைந்தவை காதலின் ஒருவகைப் பித்துநிலை சொப்பனாவஸ்தை வியாக்கியானம் அரற்றல் என்பவற்றை அவருடைய கவிதைகள் கொண்டிருக்கின்றன.
ஆழகை சால்வையில் சுற்றி மறைத்திருக்கிறார்கள் தங்கள் மேனிகளை… என அவர் எழுதுகிறார்.

ஒரு பெண்ணின் நிழல் கூடச் சிரிப்பது போல் அவருக்குத் தோன்றுகின்றது. கண் வழிஉதிரும் காதல் பதிவேட்டில்ஃஃ கன்னங்களிலிருந்து காதல் பூங்காற்று வீசுவது போலவும் அவளுடைய சிரிப்பு சிந்திச் சென்ற சில்லறை போலவும் தென்படுகின்றது.

ஏற்கனவே வெளிவந்த அவருடைய  ‘மாம்பழக் கொச்சி ‘ கவிதை நூல் வெளியீட்டின் போது நான் சொன்ன சில வார்த்தைகளை மறுபடியும் இப்போது நினைவூட்டுவது  பொருத்தம் ‘வார்  இறுக்காத  மத்தளத்தின்  ஒலி  எவ்வாறு இருக்கும்  என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.

அதே போல் கவிதையை  இறுக்கும்  வித்தையை  அவருக்குக் காலமும்இ வாசிப்பும்இஅனுபவங்களும்  கற்றுத்  தரும் என்பது என்னுடைய நம்பிக்கை ‘ என நான் அன்று  சொன்னேன் . இந்தத் தொகுப்பு மூலம் அவருடைய கவியுலகப் பயணம் முன்னகர்ந்திருக்கிறது என்றே சொல்லத் தோன்றுகின்றது.

வாசகன் சிணுங்கி விடக் கூடாதே என்பதில் அக்கறை கொண்டு இ ‘தோலுரித்த வாழைப் பழக் ‘ கவிதைகள் சில இந்தத் தொகுப்பில் உண்டு . ‘மருந்தடித்துப் பழுக்க வைத்த மாம்பழக் கவிதை’களும் இங்கே உண்டு . ஆனாலும் அந்தக் குறைபாடுகளை எல்லாம் மீறிய கவிதைகளும் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன .

ஒரு கவிதை எவ்விதம்  கவிதை ஆகின்றது?வெறும் வரிகளுக்கும் இகவிதைகளுக்கும்  நடுவே உள்ள வேற்றுமைகள் என்ன? என்பவை பற்றியெல்லாம் பல மேடைகளில் பேசியாயிற்று  .
கவிதை என்பது ஓர் அனுபவம் இபெரு நெருப்புக்கு முந்திய ஒரு தீப்பொறி  தொடர்மழையின் முதற்புள்ளியாக விழுந்த முதல் துளி என்று விபரித்துக் கொண்டே போகலாம் . என்னுடைய எந்தவொரு விபரிப்பும் கவிதை விளைவிக்கும் அனுபவத்தை ஈடு செய்யப் போவதில்லை

6-PMMA CXADER-01-12-2017

Web Design by The Design Lanka