(படங்கள் இணைப்பு) சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கும், மரணித்தோருக்கும் துஆ பிரார்த்தனை - Sri Lanka Muslim

(படங்கள் இணைப்பு) சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கும், மரணித்தோருக்கும் துஆ பிரார்த்தனை

Contributors

(எம்.பைஷல் இஸ்மாயில்)

எமது தேசத்தை தாக்கிய சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கும், மரணித்தோருக்கும் இறையருள் வேண்டி பிராத்திக்கும் நிகழ்வு இன்று (26) காலை 9.26 மணியளவில் அட்டாளைச்சேனை பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட பிரைஜைகள் சமூக அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் ஹம்ஸா சனூஸ் ஏற்பாட்டின் கீழ் அட்டாளைச்சேனை பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில், பிரதேச சபை உறுப்பினர்களான எ.எஸ்.எல்.முனாஸ், ஏ.எஸ்.எம்.உவைஸ் என்.எஸ்.யாசீர் ஜமன் உள்ளிட்ட பல பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இதில் பிரதம ஏ.எல்.எம்.நஸீர் மற்றும் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.அன்ஸில் ஆகியோரினால் கடந்த சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் கும்பங்களை இழந்த மக்களுக்கும் மிக ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் மௌலவி முஹம்மட் நழீமினால் விஷேட துஆப் பிராத்தனையும் நடைபெற்றது.

– See more at: http://madawalanews.com/news/regional-news/9979#sthash.j5ZcuoBt.dpuf

Web Design by Srilanka Muslims Web Team