(படங்கள் இணைப்பு) மூதூரில் இன்று மர்ஹும் எம்.ஈ.எச்.மஹ்ரூபின் 16வது வருட நினைவு தின நிகழ்வு. - Sri Lanka Muslim

(படங்கள் இணைப்பு) மூதூரில் இன்று மர்ஹும் எம்.ஈ.எச்.மஹ்ரூபின் 16வது வருட நினைவு தின நிகழ்வு.

Contributors

  -மூதூர் முறாசில்-

திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மர்ஹும் எம்.ஈ.எச்.மஹ்ரூபின் 16வது வருட நினைவு தின  நிகழ்வு இன்று மூதூரில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இம்ரான் மஹ்ருப் தலைமையில் மூதூர் அல்ஹிதாயா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது ஊடகவியலாளர் ஏ.சி.எம்.முஸ்இல் எழுதிய  ‘மர்ஹும் அல் ஹாஜ் எம்.ஈ.எச்.மஹ்ரூப் அவர்களின் கல்விப் பணிகள்’ என்னும் நூல் வெளியிடப்பட்டது.

மேலும்,இம்தியாஸ் பாக்கீர் மாக்காருக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதோடு ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும் மஹ்ரூப் நினைவு தினப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் பதக்கங்களும்  பரிசில்களும் வழங்கப்பட்டன.

 

 

Web Design by Srilanka Muslims Web Team