படிப்பினை மிக்க ஊவா மாகானசபைத் தேர்தல் - Sri Lanka Muslim

படிப்பினை மிக்க ஊவா மாகானசபைத் தேர்தல்

Contributors
author image

முனாப் நுபார்தீன்

நாளை 20-09-2014 ம் திகதி சனிக்கிழமை நடைபெற இருக்கின்ற ஊவா மாகான சபைத் தேர்தல் 66 ஆண்டு கால சுதந்திர இலங்கையின் தேர்தல் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்தலாக தேசிய சர்வதேச மட்டத்தில் பார்கப்படுகின்றது.

 

1. இந்தத் தேர்தல் அதனைத் தொடர்ந்து நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற ஜனாதிபதித் தேர்தலின் முடிவு எவ்வாறு அமையும் என்பதனை அறிவிப்பதாக உள்ளது.

 

2. இந்தத் தேர்தல் இந்த நாட்டு மக்களின் அறிவு நிலையை வெளிச்சம் போட்டுக்காட்டக் கூடியதாக அமைய உள்ளது.

 

3. இந்தத் தேர்தல் இந்த நாட்டின் சிறுபாண்மையினர்களின் அரசியல் ஞானத்தினைப் புலப்படுத்தக்கூடியதாக அமைய உள்ளது.

 

4. இந்தத் தேர்தல் இனவாதத்தின் சாதக பாதகங்களை வெளிக்கொணரக் கூடியதாக அமைய உள்ளது.

 

5. இந்தத் தேர்தல் சிறுபாண்மை சமூகங்கள் தங்களது எதிர்கால அரசியல் காய் நகர்த்தல்களை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதனைக் கற்றுத் தருவனவாக அமைய உள்ளது.

 

6. இந்தத் தேர்தல் நயவஞ்சகர்களை இனங்காட்டக்கூடியதாக அமைய உள்ளது.

 

7. இந்தத் தேர்தல் சமூகத் துரோகிகளின் முகத்திரையைக் கிழிக்கக்கூடியதாக அமைய உள்ளது.

 

மொத்தத்தில் நாட்டு மக்கள் அனைவரினதும் முழுக்கவனத்தையும் ஈர்த்திருக்கும் இந்தத் தேர்தலானது இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமையும் என்றே பெரும்பாலும்; எதிர்பார்கப்படுகின்றது.

Web Design by Srilanka Muslims Web Team