'பட்ஜெட் மாயாஜாலம் வேண்டாம்- மக்களுக்கு நிவாரணம் கொடு' - jvp - Sri Lanka Muslim

‘பட்ஜெட் மாயாஜாலம் வேண்டாம்- மக்களுக்கு நிவாரணம் கொடு’ – jvp

Contributors

‘பட்ஜெட் மாயாஜாலம் வேண்டாம்- மக்களுக்கு நிவாரணம் கொடு’ என்ற தொனிப்பொருளில் மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) கொழும்பில் எதிர்ப்பு பேரணியொன்றை நடத்தியது.

ஜனாதிபதி 2014-ம் ஆண்டுக்காக சமர்ப்பித்துள்ள வரவுசெலவுத் திட்டம் மோசடி மிக்கது என்று அங்கு பேசிய ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

மக்களுக்கு மானியங்களை வழங்கவேண்டிய அரசாங்கம், அதற்குப் பதிலாக மக்கள் மீது பெரும் சுமைகளை சுமத்தியுள்ளதாக பிபிசியிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி கூறினார்.

‘மக்களுக்கு அரசாங்கம் உறுதியளித்துள்ள நிவாரணங்கள் அடுத்த ஆண்டு ஜனவரியிலிருந்து தான் கிடைக்கும், ஆனால் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வரிச்சுமை வரவுசெலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட நாளின் நள்ளிரவிலிருந்தே நடைமுறையாக தொடங்கிவிடும்’ என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தோட்டத் தொழிலாளர்களையும் மகிந்த ராஜபக்ஷ ஏமாற்றியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

jvp3

 

JVP4

 

jvp1

Web Design by Srilanka Muslims Web Team