பட்ஜெட்- Mr.பொதுமகன் பார்வையில் (கவிதை) » Sri Lanka Muslim

பட்ஜெட்- Mr.பொதுமகன் பார்வையில் (கவிதை)

budget kinniya

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Mohamed Nizous


முறிகள் மீதான கொடுப்பனவு-
முறிச்சு நீயே வெச்சுக்கப்பா
கறி புளி விலை குறைக்கும்
கதை இருந்தா சொல்லுங்கப்பா

தம்புள்ள மைதான விருத்தி-
நம்பளுக்கு என்னத்துக்கு
சம்பளம் கூட்டுவியா
சிம்பிளாய் சொல்லுப்பா

மொத்த உண்ணாட்டு உற்பத்தி-
மொக்கை மேற்றர் அதெல்லாம்
அத்தியவசியப் பொருள் விலை
எத்தனையால் குறையுமாம்?

தேசிய வருவாய் வீதம்
தேவை யாருக்கு?
தேங்காய் விலை குறையுமா
தெளிவாச் சொல்லுப்பா.

வெளி நாட்டுக் கடன் தொகை-
வேற மேற்றர் பேசுங்கப்பா.
எளியவனுக்கு கொடுப்பனவு
ஏதும் இருக்கா சொல்லுங்கப்பா

சிறு கைத்தொழில் முதலீடு-
சித்த சும்மா இருக்கிறீயா?
தெருவில ரோடு உடைஞ்சிருக்கு
திருத்த எவ்வளவு ஒதுக்குவாய்?

குறைக்கிற குறைக்கிறண்ணு
குரைக்கிர செய்தியெல்லாம்
இலக்‌ஷனோடு முடியுமாப்பா?
இல்ல தொடருமாப்பா?

Web Design by The Design Lanka