பட்டதாரி பயிலுனர் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்ட/அழைக்கப்படாத பட்டதாரிகளின் கவனத்துக்கு » Sri Lanka Muslim

பட்டதாரி பயிலுனர் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்ட/அழைக்கப்படாத பட்டதாரிகளின் கவனத்துக்கு

degree

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சினால் கடந்த ஆண்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்கான பட்டதாரி பயிலுனர்களை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்ட நிலையில், அதற்கான நேர்முகப்பரீட்சைக்கு பட்டதாரிகளுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. எதிர்வரும் 16 முதல் 30 ஆம் திகதி வரை இலங்கை முழுவதும் நேர்முகப்பரீட்சை இடம்பெறவுள்ளது. இது தொடர்பில் சில விளக்கங்களை விண்ணப்பதாரிகளுக்கு வழங்குவது நல்லது என்று கருதுகிறேன்.

01. பயிற்சிக்காலம் இரண்டு ஆண்டுகளாகவும், பயிற்சிக்காலக் கொடுப்பனவாக Rs. 20,000.00 உம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

02. விண்ணப்பிக்காத/விண்ணப்பித்தும் இணையத்தில் பெயர் இல்லாத/கடிதங்கள் கிடைக்கப்பெறாத பட்டதாரிகள் அச்சமடையத் தேவையில்லை. பின்வரும் விபரங்களை உள்ளடக்கி சுயமாக தயாரிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் உங்கள் மாவட்ட செயலகத்தில் (கச்சேரி) அரசாங்க அதிபர் அல்லது மேலதிக அரசாங்க அதிபரிடம் விரைவாகக் கையளிக்க முடியும். உங்களுக்குப் பொருத்தமான திகதியை அரசாங்க அதிபர் அறிவிப்பார்.

01. Full Name
02. Date of Birth
03. NIC No
04. Gender
05. Permenant Address
06. GN Division
07. DS Division
08. District
09. Contact TP

Educational Qualification
10. University
11. Special/General/Class
12. Subjects
13. Effective Date of the Degree
14. Extra Curricular Activities
15. Marital Status
16. Two Refrees (Name & Contact No)
17. Siganture & Date

03. நேர்முகப்பரீட்சையில் கலந்துகொள்ளும் பட்டதாரிகளின் மொழித்தேர்ச்சி, கணினி அறிவு, மேலதிக கல்வித்தகைமைகள், புறக்கிருத்திய செயல்பாடுகளின் சான்றிதழ்கள் மற்றும் நேர்முகப்பரீட்சையில் காண்பிக்கும் திறமை என்பன பரீட்சிக்கப்படும். இவைகளுக்கு தனித்தனியாக இருபது புள்ளிகள் வீதம் நூறு புள்ளிகளுக்கு கணிப்பீடு இடம்பெறும். ஆதலால், பட்டச் சான்றிதழ் உட்பட முடியுமான அனைத்துச் சான்றிதழ்களின் மூலப்பிரதிகளையும், நகல் பிரதிகளையும் கொண்டு செல்லுங்கள்.

04. இதில் 31.12.2016 இற்கு முன் பட்டம் முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றாலும் ஏனையவர்களும் திறமையாக நேர்முகப்பரீட்சையில் செயல்படுங்கள்.

05. கடிதத்தில் குறிப்பிடப்பட்டது போல பட்டச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ்கள், பிறப்புச் சான்றிதழ், ஏனைய சான்றிதழ்கள், அடையாள அட்டை, வதிவிடத்தை உறுதிப்படுத்தும் பிரதேச செயலாளரின் அறிக்கை, வேலையற்ற பட்டதாரி என்பதனை உறுதிப்படுத்தும் சான்றிதழ்கள் என்பன கட்டாயமானதாகும்.

06. அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் மொழித்தேர்ச்சி தொடர்பான சான்றிதழ்கள், கணினி அறிவு தொடர்பான சான்றிதழ்கள் என்பன உங்களிடம் இருந்தால் கட்டாயம் கொண்டு செல்லவும்.

07. இலங்கைக்கு வெளியே அல்லது வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பெறப்பட்ட பட்டங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உறுதிப்படுத்தலுடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

08. புள்ளிகளின் அடிப்படையிலேயே பட்டதாரிகள் தெரிவு இடம்பெறவுள்ளதால் உங்கள் அதிகபட்ச திறமையை காண்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளீர்.

இந்நேர்முகப் பரீட்சையில் கலந்துகொள்ளவுள்ள அனைத்துப் பட்டதாரிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். இதுகுறித்து ஏதும் சந்தேகங்கள், பிரச்சினைகள் இருந்தால் எனது மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சலிடவும். முடியுமானவரை உதவிகள் வழங்க முடியும்.

மீண்டும் வாழ்த்துக்கள்,

எப்.எச்.,ஏ. ஷிப்லி
விரிவுரையாளர்
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
shiblyfh@seu.ac.lk

Web Design by The Design Lanka