பட்டமளிப்பு ஒத்திவைப்பு பல காரணம் உள்ளது-பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் - Sri Lanka Muslim

பட்டமளிப்பு ஒத்திவைப்பு பல காரணம் உள்ளது-பேராசிரியர் வசந்தி அரசரட்ணம்

Contributors
author image

Farook Sihan - Journalist

கலைப்பீடத்தின் சில கற்கைநெறிக்கான பரீட்சை முடிவுகள் இதுவரை வெளியிடப்படாத காரணத்தினால் பட்டமளிப்பு நிகழ்வு பிற்போடப்பட்டதாக யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்தார்.
எதிர்வரும் ஒன்டோபர் 6 இல் நடைபெறவிருந்த பட்டமளிப்பு திடிரென பிற்போடப்பட்டமை குறித்து வினவியபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

மேலும் தெரிவிக்கையில்

 

கலைப்பீடத்தில் சில கற்கைநெறிக்கான பரிட்சை முடிவுகள் உரிய காலத்தில் கிடைக்க பெறவில்லை.இதனால் பட்டமளிப்பு நிகழ்வினை நடாத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டது.இதனை தவிர்க்கும் வகையில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடலை மேற்கொண்டு எதிர்வரும் நவம்பர் 10 ம் திகதி ஒத்திவைத்துள்ளதாக தெரிவித்தார்.

 

தொடர்ந்து நாளை இநாளை மறுதினம் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்காக பல்கலைக்கழகம் மூடப்படுவது குறித்து இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

 

இவரது இக்கூற்றினை உறுதிப்படுத்த தற்போதைய கலைப்பீடாதிபதி பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது உபவேந்தர் தெரிவித்ததன் படி கலைப்பீடத்தின் சில கற்கைநெறிக்கான பரீட்சை முடிவுகள் கிடைக்கப்பபெறாத காரணத்தினால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

 

இது தவிர உயர் தர பரீட்சை வினாத்தாள் மதீப்பீட்டிற்கு விரிவுரையாளர்கள் சென்றமையினால் இவ்வாறு பல்கலைக்கழக பரீட்சை முடிவுகள் உரிய காலத்தில் வெளியிட முடியவில்லை என தனது கருத்தில் தெரிவித்தார்

Web Design by Srilanka Muslims Web Team