பட்டமிட்ட சிறுவன் றிம்ஸான் பரிதாப நிலையில் மரணம் » Sri Lanka Muslim

பட்டமிட்ட சிறுவன் றிம்ஸான் பரிதாப நிலையில் மரணம்

die6

Contributors
author image

ABDUL SALAM YASEEM - TRINCO

திருகோணமலை சோனகவாடி பகுதியில்  15 வயது சிறுவன் பட்டமிட்டுக்கொண்டிருந்த போது பட்டம் மரத்தில் சிக்கியதால் அதனை களட்ட சென்ற சிறுவன் மரத்திலிருந்து வீழ்ந்து  இன்று (24) பிற்பகல் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் அதே இடத்தைச்சேர்ந்த ஆர்.எப்.எம்.றிம்ஸான் (15வயது) எனவும் தெரியவருகின்றது.

குறித்த சிறுவன் சோனகவாடி முஸ்லிம் மஹா வித்தியாலயத்திற்குள் தனது நண்பர்களுடன் பட்டம் விட்டுக்கொண்டிருந்த போது மரத்தில் சிக்குண்ட நிலையில் அதனை களட்ட மரத்தில் ஏறிய போது கால் தவறி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் நேற்று சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதேவேளை சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

குறித்த சிறுவன்    விழுந்தமையினால் தலையில் இரத்த கசிவு ஏற்பட்டமையினாலேயே இம்மரணம் ஏற்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்தியதிகாரி தெரிவித்தார்.

சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாாகவும் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

Web Design by The Design Lanka