பண்டாரவளையில் பதற்றம் ; பண்டாரவளை மேயர் மீது தாக்குதல் - Sri Lanka Muslim

பண்டாரவளையில் பதற்றம் ; பண்டாரவளை மேயர் மீது தாக்குதல்

Contributors
author image

Editorial Team

பண்டாரவளையில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

பண்டாரவளை, கஹடரூபே எனுமிடத்தில் இரண்டு பிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பையடுத்தே பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இதேவேளை தாக்குதலுக்கு உள்ளான நிலையில் பண்டாரவளை மேயர் ஷமிந்த விஜேசிறி( ஐக்கிய தேசியக்கட்சி) தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

பண்டாரவளை வடக்கு கெபில்லவெல எனுமிடத்தில் வைத்தே தன்மீது பிரதியமைச்சர்கள் இருவர் தாக்குதல் நடத்தியதாக அவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team