பண்டிகை கொண்டாட்டம் குறித்து இன்னும் ஒரு வாரத்தில் தீர்மானம். - Sri Lanka Muslim

பண்டிகை கொண்டாட்டம் குறித்து இன்னும் ஒரு வாரத்தில் தீர்மானம்.

Contributors

பண்டிகைகளை கொண்டாடுவது தொடர்பில் அடுத்தவாரம் அளவில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என கொவிட்-19 தொற்றை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

புதுவருட கொண்டாட்டங்களை நடத்துவது குறித்த பரிந்துரைகள், இந்த மத்திய நிலையத்தினால் தற்சமயம் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

அது சுகாதார தொழில்நுட்ப குழுவிடம் அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னர் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் தடுப்பூசியின் முழுப் பயனையும் பெறுவதற்கு இரண்டாவது டோஸையும் ஏற்றிக் கொள்ள வேண்டியது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team