பண்டோரா ஊழல் மோசடி குறித்து விசாரிக்க பாராளுமன்றில் விஷேட குழுவை நியமிக்க வேண்டும் - சஜித்..! - Sri Lanka Muslim

பண்டோரா ஊழல் மோசடி குறித்து விசாரிக்க பாராளுமன்றில் விஷேட குழுவை நியமிக்க வேண்டும் – சஜித்..!

Contributors

பண்டோரா ஊழல் மோசடி குறித்து விசாரிக்க பாராளு மன்றத்தில் விஷேட குழுவை நியமிக்க வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன் றத்தில் தெரிவித்துள்ளார்.

வரி ஏய்ப்பு மற்றும் பண மோசடி உள்ளிட்ட இரகசிய நிதிப் பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ள பண்டோரா பேப்பர் மூலம் இலங்கையின் பல பிரமுகர்கள் அம்பலப்படுத் தப்பட்டுள்ளனர் என்றும் இது மிகவும் தீவிரமான சூழ்நிலை என்றும் சஜித் தெரிவித்துள்ளார்.

பண்டோரா ஆவண விவகாரம் குறித்து உடனடியாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றில் இன்று வலியுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், பண்டோரா வெளிப்பாடுகள் மூலம் இலங்கையர்களின் பெயர்களை வெளிப்படுத்தியமை குறித்து இலங்கை இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை. இந்தத் தீவிர வெளிப்பாடு தொடர்பாக அரசாங்க அதிகாரிகளின் செயலற்ற கொள்கை மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

குறித்த வெளிப்பாடுகளின்படி, அவர்களிடம் பாரிய அளவு செல்வம் உள்ளது என்றும் அவர்கள் அதை எவ்வாறு சம்பாதித்தார்கள் என்பதை நாடுக்கு அறிவிக்க வேண்டும் என்றும் குறித்த பணம் வைப்பில் இடப்பட்டுள்ள நாடுகள் குறித்து வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பண்டோரா ஆவணத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள குற்றச் சாட்டுகளுக்குப் பல நாட்டுத் தலைவர்கள் பதிலளித்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நாடு இன்று பரிதாபமான சூழ்நிலையில் உள்ளது. அத்தியாவசிய உணவுகளை வாங்க நாடு முழுவதும் மக்கள் வரிசையில் நிற்கின்றனர். இரண்டு ஆண்டு களாகக் கல்வி வீழ்ச்சியடைந்துள்ளது. ஆசிரியர்கள் தங்கள் தொழிற்சங்க உரிமைகளுக்காக ஒரு வருடத்துக்கும் மேலாக போராடி வருகின்றனர்.
13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா பேரழிவால் உயிரிழந்துள்ளனர். போதை மருந்து மாஃபியாவால் பல நோயாளிகள் உயிருக்குப் போராடி வருகின்றனர்.

விவசாய சமூகம் உட்பட அனைத்துப் பிரிவுகளும் பாதிக்கப் பட்டுள்ளன. நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் சரிந்துள்ளது.
பண்டோரா வெளிப்பாடுகளுடன், பல நாடுகள் உடனடி நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளன. அண்டை நாடான இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் நாடுகளில் என்ன நடந்தது என்பதை உடனடியாக விசாரிக்க முடிவு செய்துள்ளன.

பாரிய மோசடி நாட்டில் இடம்பெற்றுள்ளமை குறித்து பண்டோரா ஆவணம் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, இந்தப் பெரும் மோசடியின் உண்மையான நிலைகள் அரசியல் தலையீடுகள், பாரபட்சமின்றி வெளிப் படைத்தன்மை மற்றும் சர்வதேச அங்கீகாரத்துடன் விரைவாக நடத்தப்பட வேண்டும் என்றும் வலி யுறுத்தியுள்ளார்.
பண்டோரா ஊழல் மோசடி குறித்து விசாரிக்க பாராளு மன்றத்தில் விஷேட குழுவை நியமிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team